செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வருமா.. அரைவேக்காட்டு பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி!
சென்னை: திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நேற்று மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வரும் என விஜய் ஆண்டனி பேட்டியில் சொன்னது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சின்னத்திரையில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, சுக்ரன் திரைப்படம் மூலம் முதன் முதலில் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதை தொடர்ந்து டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தார். இதைத் தொடர்ந்து 2012ல் வெளிவந்து நான் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் போன்ற படம் வெற்றியடைந்தது. அதில் குறிப்பாக பிரச்சைக்காரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

நடிகர் விஜய் ஆண்டனி: இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறினார். அந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் வெளியான நிலையில், மழை பிடிக்காத மனிதன் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
செருப்பு இல்லாமல் நடங்க: நடிகர் விஜய் ஆண்டனி கடந்த சில நாட்களாக இசைவெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு, பட ப்ரோமோஷன் என எந்த விழாவிற்கு சென்றாலும், செருப்பு இல்லாமலே காணப்பட்டார். இதுகுறித்து தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்க, திடீரென எனக்கு அப்படி தோன்றியதால், செருப்பு இல்லாமல் நடந்து பார்த்தேன் அது எனக்கு பிடித்து இருந்தது மட்டுமில்லாமல் , எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார். மேலும், மனத்திற்கு உத்வேகம் வேண்டுமா, மனம் சோர்வா இருக்கா, உங்களுக்குள் ஏதாவது மாற்றம் வேண்டுமா ... அப்போ செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் என்று கூறியிருந்தார்.
சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனி கூறியதை அவரது ரசிகர்கள் வரவேற்றாலும், இது மருத்துவ ரீதியாக சர்ச்சையை கிளப்பியது. இணையத்தில் மருத்துவர் ஒருவர். அக்லோஸ்டோமோ குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும் என்றும், இந்த ரத்த சோகையால் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பகால மரணம் தொடங்கி குழந்தைகள் மரணம் வரை ரத்தசோகை கொண்டுவந்துவிடும் என்றார். இதில் இருந்து தப்பிக்க செருப்பு அணிவது தான் சிறந்தது, சிலர் அரைகுறையாக எதையாவது தெரிந்து கொண்டு பேசுவதை நம்பி ரத்த சோகைக்கு ஆளாகாதீர்கள் என்று, மருத்துவர் விஜய் ஆண்டனியை கடுமையாக சாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











