அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே.. மீரா உடலை பார்த்து கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி!

சென்னை: அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே என்று மகளின் உடலைப்பார்த்து விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கதறி கதறி அழுதார்.

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது, திரையுலகினரை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மக்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது அனைவரையும் தீராத துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

Vijay Antonys wife Fatima cried after seeing the body of her daughter Meera

விஜய் ஆண்டனி மகள்: 12ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனி மகள் கடந்த ஓராண்டாக சோர்வுடன் காணப்பட்டதால், அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டின், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் அஞ்சலி: இதையடுத்து, உடலை போலீசார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானதை அடுத்து, மீராவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

Vijay Antonys wife Fatima cried after seeing the body of her daughter Meera

கதறி அழுத தோழிகள்: இதில், முன்னணி நடிகர்கள், நடிகைகள், பலரும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து அவரது மகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பள்ளி ஆசிரியர்கள், தோழிகள் என அனைவருமே தாங்க முடியாத துயரத்துடன் கதறி அழுதபடி இருந்தார். இதையடுத்து, மீராவின் உடல் மலரால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தெரசா தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்த ஜென்மத்தில்: இந்த திருப்பலிக் கூட்டத்தில் மீராவின் புகைப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பிரார்த்தனையில் விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும் கதறி கதறி அழுதுக் கொண்டிருந்தனர். அப்போது பாத்திமா, உன்னை கருவில் சுமந்ததை நினைத்து பெருமை அடைகிறேன், இந்த ஜென்மத்தில் பிரிந்தாலும், அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே... என்ன பிரச்சனையாக இருந்தாலும் சொல்லி இருக்லாமே என அவர் கதறி கதறி அழுதார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X