என்னா மீஜிக்.. என்னா மீஜிக்...இமானை பாராட்டிய விஜய்
சென்னை: விஜய் தனது இசைத் திறமையை பாராட்டியுள்ளதால் இசையமைப்பாளர் டி.இமான் குஷியாக உள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு ரிலீஸான விஜய்யின் தமிழன் படம் மூலம் இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் டி. இமான். அதன் பிறகு அவர் பல படங்களுக்கு இசையமைத்து வந்தபோதிலும் மீண்டும் விஜய் படத்தில் பணியாற்ற வாய்ப்பு வரவில்லை.
இந்நிலையில் தான் நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இமானுக்கு கிடைத்தது.

பார்த்து பார்த்து டியூன்
11 ஆண்டுகள் கழித்து விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் இமான் குஷியாகிவிட்டார். பாடல்கள் ஹிட்டாக வேண்டும் என்று படத்திற்கு பூஜை போட்ட கையோடு பார்த்து பார்த்து டியூன் போட ஆரம்பித்துவிட்டாராம்.

விஜய்க்கு போட்டுக் காட்டி
தான் மிகவும் கவனமாக போட்ட டியூன்களை விஜய்யிடம் போட்டுக் காட்டி அவர் தேர்வு செய்த டியூன்களையே பாடல்களுக்கு பயன்படுத்தியுள்ளார் இமான்.

கண்டாங்கி கண்டாங்கி
இமான் விஜய்யை ஒரு பாடலுக்கு பாடவும் வைத்துள்ளார். விஜய் ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார்.

பாராட்டு
பாட்டை பாடி முடித்த விஜய் இந்த பாட்டு நிச்சியம் ஹிட்டாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இமானின் இசையையும் பாராட்டியுள்ளார். விஜய் தன்னை பாராட்டியதை நினைத்து நினைத்து மகிழ்கிறாராம் இமான்.


Click it and Unblock the Notifications











