twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி கீர்த்தியை கையிலேயே பிடிக்க முடியாது: யார் பாராட்டியிருக்கிறார்னு பாருங்க

    By Siva
    |

    Recommended Video

    சாவித்ரியாக அசத்திய கீர்த்தி சுரேஷ்.. அழைத்துப் பாராட்டிய உலகநாயகன்!

    சென்னை: நடிகையர் திலகம் படத்தில் அருமையாக நடித்த கீர்த்தி சுரேஷை விஜய் பாராட்டினாராம்.

    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கணேசனாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்தபோதே பலரும் இயக்குனர் நாக் அஸ்வினை பார்த்து சிரித்தார்கள். போயும் போய் கீர்த்தி சுரேஷா, வேறு நடிகையே கிடைக்கவில்லையா என்றார்கள்.

    நாக் அஸ்வின் யார் பேச்சையும் கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷை சாவித்ரியாக நடிக்க வைத்தே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார்.

    கீர்த்தி

    கீர்த்தி

    நடிகையர் திலகம் படத்தை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அசத்திவிட்டார். கீர்த்தியா இது இல்லை சாவித்ரியா என்று கேட்கும் அளவுக்கு நடித்துள்ளார்.

    பாராட்டு

    பாராட்டு

    இத்தனை நாள் இந்த நடிப்பை எல்லாம் எங்கே வச்சிருந்தீங்க கீர்த்தி என்று கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். தனக்கு நடிக்க வராது என்று கூறி மற்றவர்கள் கேலியாக சிரித்ததை சவாலாக எடுத்துக் கொண்டு இந்த படத்தில் நடித்துக் காட்டியுள்ளார்.

    மாற்றம்

    மாற்றம்

    நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு ஹீரோயினை மையமாக கொண்ட படங்களில் கீர்த்தியை நம்பி நடிக்க வைக்கலாம் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வந்துள்ளது.

    விஜய்

    விஜய்

    விஜய் 62 படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷை விஜய் பாராட்டினாராம். நடிகையர் திலகம் படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று கூறினாராம் விஜய். தனக்கு மிகவும் பிடித்த விஜய் பாராட்டியதால் கீர்த்தி மகிழ்ச்சியில் உள்ளாராம்.

    English summary
    Vijay has appreciated Keerthy Suresh for her extraorinary acting in Mahanati. People are surpised when they see Keerthy's amazing performance on screen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X