விஜய் அண்ணா போன் பண்ணாங்களே: துள்ளிக் குதிக்கும் 'பரியேறும் பெருமாள்' கதிர்

By Siva

சென்னை: பரியேறும் பெருமாள் பட ஹீரோ கதிருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் விஜய்.

புதுமுகம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான படம் பரியேறும் பெருமாள். படம் ரிலீஸான அன்றில் இருந்து இன்று வரை அது குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.

இந்நிலையில் ஊரே பேசும் கதிருக்கு விஜய் போன் போட்டு பாராட்டியுள்ளார்.

விஜய்

விஜய் போன் செய்து பாராட்டியதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கதிர். உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி விஜய் சார். உங்களின் வார்த்தைகளை கேட்டபோது அனைத்து விஜய் ரசிகர்களின் அன்பையும், வாழ்த்தையும் பெற்றது போன்று இருந்தது. அந்த அளவுக்கு பாசிட்டிவ் எனர்ஜி அண்ணா என்று ட்வீட்டியுள்ளார் கதிர்.

பாராட்டு

பாராட்டு

பரியேறும் பெருமாள் என் வாழ்வில் நிச்சயம் திருப்புமுனையாக இருக்கும் என்று கதிர் தெரிவித்திருந்தார். புதுப்படம் ரிலீஸாகும் போது அனைத்து ஹீரோக்களும் சொல்வதை தான் இந்த கதிரும் சொல்கிறார் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் படத்தை பார்த்த பிறகே கதிர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெரிய வந்துள்ளது.

சினிமா

சினிமா

பரியேறும் பெருமாள் படத்தை தனது தோளில் தாங்கியுள்ளார் கதிர். இந்த கதிருக்குள் இவ்வளவு திறமையா என்று படம் பார்ப்பவர்கள் வியக்கிறார்கள். கயல் ஆனந்திக்கு கமர்ஷியல் அல்ல மாறாக இது போன்ற படங்கள் தான் பொருத்தமாக உள்ளது. இதை அவர் உணர்ந்து செயல்பட்டால் அவரின் கெரியர் டாப்பில் செல்லும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பரியேறும் பெருமாளுக்கு பிறகு கதிர் கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரியேறும் பெருமாள் படம் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ரசிகர்களே தியேட்டர் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்த சம்பவம் நடந்துள்ளது. பா. ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X