அண்ணா, என்னமா படம் எடுத்திருக்கீங்கண்ணா: பார்த்திபனை நேரில் பாராட்டினாரா விஜய்?
சென்னை: பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்த விஜய் நேராக பார்த்திபனின் ஆலுவலகத்திற்கு சென்று அவரை மனதார பாராட்டினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் பார்த்திபனோ இல்லை என்கிறார்.

பார்த்திபன் கதையே இல்லாமல் எடுத்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. வழக்கமான பாணியில் படம் எடுக்காமல் பார்த்திபன் புதிய பாதையை பின்பற்றியுள்ளார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரெல்லாம் படத்தை பார்த்து போன்றே இளைய தளபதி விஜய்யும் பார்த்திபனின் படத்தை பார்த்தாராம். பார்த்தவர் அசந்துவிட்டாராம். உடனே காரை கிளப்பிக் கொண்டு நேராக பார்த்திபனின் அலுவலகத்திற்கு சென்றாராம்.
பார்த்திபனை பார்த்து சூப்பரா படம் எடுத்திருக்கீங்கண்ணா என்று மனதார பாராட்டினார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பார்த்திபனோ விஜய் தனது அலுவலகத்திற்கு வரவே இல்லை என்கிறார். யாருப்பா வதந்தியை பரப்புவது?


Click it and Unblock the Notifications











