முருகதாஸ்-விஜய் படத் தலைப்பு வாள் இல்லை தீரன்?

By Siva

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி படத்தை அடுத்து விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து ஒரு படம் பண்ணி வருகின்றனர். கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் பூஜை போட்டு படப்பிடிப்பை துவங்கினர்.

முதல்கட்ட படப்பிடிப்பை விரைந்து முடித்துக் கொண்டு சென்னை திரும்பினர்.

சென்னை

சென்னை

சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கி நடந்து வந்தது. இதையடுத்து படக்குழு ஆந்திரா கிளம்பிச் செல்கிறது.

பாடல்

பாடல்

சென்னை விமான நிலையத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளனர். அந்த பாடலில் விஜய்யுடன் 100 டான்ஸர்கள் ஆடியுள்ளனர். டான்ஸ் மாஸ்டர் ஷோபி விஜய்க்கு ஸ்டெப்ஸ் கற்றுக் கொடுத்துள்ளார்.

சமந்தா

சமந்தா

கொல்கத்தாவில் விஜய், வில்லன் டோட்டா ராய் சவுத்ரி சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதால் சமந்தா அங்கு செல்லவில்லை. இந்நிலையில் அவர் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் ஒரு நாள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.

தீரன்

தீரன்

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை முருகதாஸ் மறுத்தார். இந்நிலையில் படத்திற்கு தீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

3வது முறை

3வது முறை

முன்னதாக விஜய் வில்லு மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இரட்டை வேடம் ஏற்றுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X