விஜய் தான் முதலமைச்சர்னு சொன்ன முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.. நக்கல் போஸ்ட்டில் கலாய்த்து விட்ட நடிகை

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பார்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக் கணிப்புக்கு நடிகை வினோதினி வைத்தியநாதன் நக்கலான பதிலால் கலாய்த்து விட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வீடியோவில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மூலம் நாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். அவரது தமிழக வெற்றிக் கழகம் 41 சதவீத வாக்குகளை பெறும். ஒரு தொகுதிக்கு 10 ஓய்வு பெற்ற காவலர்கள் என்ற கணக்கில் தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் மொத்தம் 2.34 லட்சம் வாக்காளர்களிடம் கருத்துக் கேட்டதன் முடிவுகள் தான் இவை என்று தெரிவித்துள்ளார்.

Vijay as CM Ex-IPS Prediction Mocked by Actress Vinodhini Vaidyanathan in Viral Post

அதேபோல் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் கமெண்ட் செக்‌ஷனில் அவரே, " இது அனைத்தும் சர்வே செய்து வந்த தனிப்பட்ட கருத்து கணிப்பு. Comment section -னில் யாரும் குஜிலிமஸ்து போட்டு கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்" என்றும் பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த போஸ்ட்டுக்கு நடிகை வினோதினி வைத்தியநாதன், " முதலமைச்சர் விஜய் அண்ணாவின் சிறப்பான ஆட்சியின் கீழ் தமிழ்நாடு வரும் ஆண்டுகளில் இருப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். மே 7ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அணிந்து கொள்ள, வெள்ளை நிறச் சட்டையும் வெளிர் காக்கி நிற பேண்ட்டும் ஏற்கனவே ஆர்டர் செய்துவிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த நக்கலான போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X