twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி விஜய் தான் புரொஃபஸர்.. மணி ஹெய்ஸ்ட் இயக்குநரே சொல்லிட்டாரே.. தல அஜித்துக்கு இந்த ரோலாம்!

    |

    சென்னை: தளபதி விஜய் தான் புரொஃபஸர் ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ கூறியுள்ளார்.

    Recommended Video

    மனி ஹெய்ஸ்ட் | SEASON - 01 | EP- 01 | TAMIL REVIEW | Filmibeat Tamil

    ஸ்பானிஷ் கேபிள் டிவியில் ஒளிபரப்பான மணி ஹெய்ஸ்ட் தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுக்க கொண்டு சேர்த்துள்ளது.

    சுமார் 70 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இந்த மணி ஹெய்ஸ்டின் இயக்குநரிடம் பிரத்யேக பேட்டியை பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் நடத்தி இருக்கிறது.

    மிஸ்டரி த்ரில்லர் கதையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. லாக்டவுன் முடிந்ததும் அடுத்த கட்ட ஷூட்டிங்!மிஸ்டரி த்ரில்லர் கதையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. லாக்டவுன் முடிந்ததும் அடுத்த கட்ட ஷூட்டிங்!

    மணி ஹெய்ஸ்ட்

    மணி ஹெய்ஸ்ட்

    ஸ்பெயின் நாட்டில் உள்ள ராயல் மின்ட் எனும் பணம் அச்சடிக்கும் வங்கியை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார் மாஸ்டர் மைண்ட் கொண்ட புரொஃபஸர். அதற்கான ஒரு டீமையும் உருவாக்குகிறார். அந்த டீமில் இருக்கும் ஒவ்வொருவரின் பெயரும் டோக்கியோ, பெர்லின் என ஊர் பெயர்களாகவே அமைந்திருக்கின்றன. இதன் 4வது சீசன் கடந்த மாதம் வெளியாகி உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

    மாஸ்டர்

    மாஸ்டர்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் மணி ஹெய்ஸ்ட் படத்தின் தாக்கம் இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. மாஸ்டர் படத்தில், நடிகர் விஜய் காலேஜ் புரொஃபஸராக நடித்துள்ளார். அதே சமயம் எதிரிகளையும் துவம்சம் செய்ய உள்ளார். மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவான ஆடை பட இயக்குநர் பல முறை மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரையும் மாஸ்டர் படத்தையும் கம்பேர் செய்து டிவீட் போட்டுள்ளார்.

    மணி ஹெய்ஸ்ட் இயக்குநர்

    மணி ஹெய்ஸ்ட் இயக்குநர்

    இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் மாண்டரினில் இருக்கும் மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோவின் கான்டேக்ட்டை பிடித்து அவருடன் வீடியோ கால் பேட்டியையும் எடுத்து வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அதில், மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரில் இந்திய நடிகர்கள் யார் யார் என்ன என்ன ரோலில் நடிக்கலாம் என அதன் இயக்குநரே சொல்வது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

    தளபதி தான் புரொஃபஸர்

    மணி ஹெய்ஸ்ட் வெப்தொடரில் ஆல்வரோ மார்ட்டே நடித்துள்ள புரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் பொருத்தமாக இருப்பார் என மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த தளபதி ரசிகர்கள் #MoneyHeist என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    அஜித்துக்கு என்ன ரோல்

    அஜித்துக்கு என்ன ரோல்

    நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வீடியோ காலில் பார்த்த இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ போகோட்டா கதாபாத்திரத்திற்கு இவர் கச்சிதமாக பொருந்துவார் எனக் கூறியுள்ளார். தளபதி ரசிகர்கள் நடிகர் விஜய்யை புரொஃபஸராக மணி ஹெய்ஸ்ட் இயக்குநரே சொல்லிவிட்டார் என டிரெண்ட் செய்ய அஜித் ரசிகர்கள் பதிலுக்கு ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.

    பெர்லினாக ஷாருக்கான்

    பெர்லினாக ஷாருக்கான்

    மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோவிடம் தளபதி விஜய், தல அஜித், சூர்யா, மகேஷ்பாபு, ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங்கின் புகைப்படங்களை காட்டித் தான் தொகுப்பாளர் கேள்வியை எழுப்பினார். ஒவ்வொரு நடிகரையும் பார்த்து மணிஹெய்ஸ்ட் கதாபாத்திரங்களுக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்றுக் கூறி வந்த அலெக்ஸ் ரோட்ரிகோ பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு பெர்லின் ரோல் பொருத்தமாக இருக்கும் எனக் கூறினார்.

    சிங்கம் சூர்யா

    சிங்கம் சூர்யா

    சிங்கம் சூர்யாவுக்கு இங்கேயும் போலீஸ் கதாபாத்திரம் தான். சுவாரஸ் எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு சூர்யாவை தேர்வு செய்திருந்தார் மணி ஹெய்ஸ்ட் இயக்குநர். மகேஷ் பாபுவுக்கு தமாயு கதாபாத்திரத்தையும், ரன்வீர் சிங்குக்கு டென்வர் கதாபாத்திரத்தையும் தேர்வு செய்திருந்தார். சமூக வலைதளங்களில் தற்போது ரசிகர்கள் சண்டையும் சேர்ந்து கொண்டு களை கட்டி வருகிறது.

    English summary
    Alex said that Professor's role can be played by Tamil actor Vijay. He goes on to add that Ajith Kumar would fit the bill as Bogota and Shah Rukh Khan would be perfect as Berlin.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X