ஆக. 15ல் மதுரையில் விஜய்க்கு அடுத்த 'சூப்பர்ஸ்டார்' பட்டம் சூட்டப் போறாங்களாமே...!!
சென்னை: விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக அறிவிக்கும் நிகழ்ச்சி மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிரமாண்டமாக நடக்க உள்ளதாம்.
தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி வார பத்திரிக்கை அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் இளைய தளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேலும் ஒரு தகவலும் கசிந்தது.

அஜீத்
வார பத்திரிக்கை நடத்திய கருத்துகணிப்பில் உண்மையில் வெற்றி பெற்றது அஜீத் தான். அவர் அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார் என்பதால் விஜய் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ரசிகர்கள்
அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம் தொடர்பாக அஜீத், விஜய் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் படு மோசமாக சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

ரஜினி ரசிகர்கள்
அஜீத், விஜய் ரசிகர்களின் சண்டையை பார்த்த ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான். வேறு யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

விஜய்
இத்தனை பிரச்சனைகளையும் பார்த்த பிறகு விஜய் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் வேண்டாம் என்று தெரிவித்தார்.

பிரமாண்ட நிகழ்ச்சி
விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக அறிவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடக்க உள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











