பட்டையைக் கிளப்பும் தளபதி 67 பிசினஸ்… சம்பளத்துக்குப் பதிலாக தரமான டீல் பேசிய விஜய்!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 அபிஸியல் அப்டேட் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் சினிமாட்டிக் கான்செப்ட்டில் உருவாகும் தளபதி 67 படத்தில், விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே தளபதி 67 பிசினஸ் சூடுபிடித்துள்ளதால், விஜய் புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தளபதி 67

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தளபதி 67

விஜய்யின் 'வாரிசு' பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணி இணைவதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை உட்பட மற்ற பிஸினஸ்களும் இப்போதே தொடங்கிவிட்டன. முன்னதாக கமல் நடித்த விக்ரம் படத்தையும் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்து அசத்தி இருந்தார் லோகேஷ். இதனாலும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படம் இப்போதே வியாபாரத்தில் மாஸ் காட்டி வருகிறது.

விஜய்யின் புதிய முடிவு

விஜய்யின் புதிய முடிவு

விஜய் தற்போது ஒரு படத்துக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியானதில்லை. இந்நிலையில், தளபதி 67 படத்திற்காக விஜய் சம்பளம் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. லோகேஷின் படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருவதால் விஜய் உஷாராக சம்பளம் வேண்டும் என சொல்லிவிட்டாராம். அதற்குப் பதிலாக லாபத்தில் ஷேர் கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். இதனால், சம்பளத்தை விடவும் பெரிய தொகை கையில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார் விஜய்.

ரஜினி பாணியில் விஜய்

ரஜினி பாணியில் விஜய்

சம்பளத்திற்கு பதிலாக ஷேரிங் என்ற முறையில் தான் ரஜினியும் சிவாஜி படத்தில் நடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில படங்களில் ரஜினி அப்படி நடித்துள்ளதாக முன்பு செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது அதே பாணியில் விஜய்யும் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே சமீபத்தில் விஜய் நடிக்கும் படங்களில் சம்பளத்துக்கு பதிலாக ஷேரிங் வாங்குவதாக சொல்லப்பட்டன. தற்போது அவர் நடித்துள்ள வாரிசு படத்திற்கும், தமிழ்நாட்டு ரைட்ஸ் விஜய்க்கு தான் எனக் கூறப்படுகிறது. அதனால் வாரிசு படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை தான் விஜய்யின் உறவினரான லலித் குமாரே வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

தளபதி 67 அப்டேட் எப்போது?

தளபதி 67 அப்டேட் எப்போது?

இதனிடையே, தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், தளபதி 67 படத்தில் கமல், சூர்யா, கார்த்தி ஆகியோரும் கேமியோ ரோலில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தளபதி 67 அப்டேட்டை தரமான டைட்டில் டீசருடன் அறிவிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான சூட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகின்றன. நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக சில தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், விஜய் சம்பளத்துக்குப் பதிலாக ஷேரிங் பேசியதாக வரும் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X