மீண்டும் பீஸ்ட் இயக்குநருடன் இணையும் விஜய்... இக்கட்டான நேரத்தில் கைக்கொடுக்கும் விஜய்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், திரைக்கதையில் நெல்சன் சொதப்பியுள்ளதாக நெல்சனை விமர்சகர்களும் ரசிகர்களும் தாளித்துவிட்டனர்.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா, ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது பீஸ்ட் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சொதப்பிய நெல்சன்

சொதப்பிய நெல்சன்

படத்தில் விஜய் போன்ற மாஸ் ஹீரோவிற்கான அம்சங்கள் எதுவும் இல்லை என்றும் சாதாரண விஷயங்களையும் சாதாரண கதையையும் கதைக்களமாக எடுத்துக் கொண்டு நெல்சன் திரைக்கதையிலும் சொதப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல விஜய்யை இந்தப் படத்தில் சிறப்பாக பயன்படுத்த நெல்சன் தவறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வசூல்மழையில் பீஸ்ட்

வசூல்மழையில் பீஸ்ட்

ஆயினும் படம் சர்வதேச அளவில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த ஆண்டில் வெளியான அண்ணாத்த, வலிமை படங்களின் மொத்த வசூலை முதல் 3 நாட்களிலேயே பீஸ்ட் படம் முறியடித்துள்ளது. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வசூலையும் பீட் செய்துள்ளது.

நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்கும் நெல்சன்

நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்கும் நெல்சன்

இந்தப் படத்தை தொடர்ந்து பல நெகட்டிவ் விமர்சனங்களை நெல்சன் எதிர்கொண்டு வருகிறார். அவரது முந்தைய படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை போல இல்லாமல் சாதாரண திரைக்கதையை விஜய்க்காக அவர் தேர்வு செய்ததே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

நெல்சனுக்கு விஜய் ஆறுதல்

நெல்சனுக்கு விஜய் ஆறுதல்

இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு பிறகு நெல்சனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நடிகர் விஜய், படத்தின் எதிர்மறை விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் மீண்டும் இணைந்து படம் செய்யலாம் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

தரம் தாழிந்த தமிழ் சினிமா - அருண் பாண்டியன் வேதனை | Aadhaar movie audio launch
இயக்குநர் பரதனுக்கு கைக்கொடுத்த விஜய்

இயக்குநர் பரதனுக்கு கைக்கொடுத்த விஜய்

இதேபோல அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் பரதனுக்கு மீண்டும் பைரவா படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்திருந்தார். இந்த பாலிசியை பின்பற்றி தற்போது நெல்சனுக்கு மீண்டும் தனது அடுத்த படத்தில் விஜய் வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X