அஸ்தமமானது பொன்மாலை பொழுது.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் சென்னை, செங்குன்றம் அருகே உள்ள தாமரைப் பாக்கத்தில் போலீசார் குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த இசைத் துறையையும் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.

72 குண்டுகள் முழங்க
ஆந்திராவில் பிறந்து இருந்தாலும், எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தார். தமிழ்நாடு தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நிரந்தர வீடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நடிகர் விஜய் அஞ்சலி
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவை அறிந்த பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்து வந்தனர். இயக்குநர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தளபதி விஜய் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார்.

காலை தொட்டு வணங்கினார்
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் அவரது காலை தொட்டு வணங்கி, இசை அரசனுக்கு இறுதி மரியாதை செலுத்தியது ரசிகர்களை நெகிழச் செய்து இருக்கிறது.

அப்பாவாக
தளபதி விஜய்யின் பிரியமானவளே படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்திருப்பார். 2000ம் ஆண்டு இயக்குநர் கே. செல்வ பாரதி இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடிப்பில் வெளியான பிரியமானவளே படம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான பிணைப்பை உருவாக்கியது.

ஏகப்பட்ட பாடல்கள்
.லவ் டுடே படத்தின் "என்ன அழகு எத்தனை அழகு" பாடல் முதல் ஜில்லா படத்தின் "பாட்டு ஒண்ணு கட்டுக் கட்டுத் தோழா" வரை ஏகப்பட்ட பாடல்களை நடிகர் விஜய்க்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி ஊர்வலத்தில் மறக்காமல் நடிகர் விஜய் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











