தளபதி விஜய்யுடன் ’தல’ பொங்கலை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.. கணவருடன் செம ஹேப்பியா விளையாடுறாரே!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் 'தல' பொங்கலை கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. தி ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜெகதீஷ் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் பங்கேற்று கொண்டாடிய காட்சிகள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.
இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் பொங்கலை கொண்டாட அங்கே திடீரென சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து தளபதி விஜய்யும் அவர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.

நடிகர் கதிர் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் 'தல' பொங்கலில் விஜய்: கடந்த ஆண்டு இறுதியில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது பல வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணத்துக்கு விஜய் மற்றும் த்ரிஷா சென்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், விஜய்யின் அட்மின் மற்றும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய்யும் பங்கேற்ற வீடியோவை தி ரூட் நிறுவனம் தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் வைத்திருக்கிறது.
பொங்கல் வைத்த விஜய்: தளபதி விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து அடுத்த ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் முடிவுடன் களத்தில் இறங்கியிருக்கிறார். இன்னொரு பக்கம் தனது கடைசி படமான தளபதி 69 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்ற விஜய் தற்போது பொங்கல் விழாவிலும் பங்கேற்று பொங்கல் பானையில் பச்சரிசி, வெள்ளம் போடும் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.
பானை உடைக்கும் போட்டி: மேலும், பொங்கலுக்கே உரித்தான கிராமப்புற விளையாட்டுக்களான பானை உடைக்கும் போட்டிகள் அரங்கேறின. நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் கதிர் உள்ளிட்ட பலர் பானைகளை உடைத்து விளையாடும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர். தனது கணவருடன் இணைந்து செம ஜாலியாக கீர்த்தி சுரேஷ் விளையாடுவதை பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.
மியூசிக்கல் ச்சேர் போட்டி: மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பெண்கள் அணி ஒரு புறமும் கதிர், ஆண்டனி தட்டில், ஜெகதீஷ் உள்ளிட்ட ஆண்கள் அணி ஒரு புறமும் நடத்திய மியூசிக்கல் ச்சேர் போட்டிகள் அடங்கிய காட்சிகளையும் ஒட்டுமொத்த பொங்கல் செலிபிரேஷன் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். பொங்கலுக்கு முன்பாக அஜித்தின் தரிசனம் ரேஸ் போட்டியின் மூலம் கிடைத்த நிலையில், பொங்கல் செலிபிரேஷன் மூலம் தளபதி விஜய்யின் தரிசனமும் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு கூடிய சீக்கிரமே தி ரூட் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்தை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications