வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய்.. சந்தோஷத்தில் பாடலாசிரியர் விவேக்.. செம க்யூட்டா இருக்காரே தளபதி!

சென்னை: பாடலாசிரியர் விவேக் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. கடைசியாக அட்லீ மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தற்போது பாடலாசிரியர் விவேக் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் பாடல்களை எழுதி பாடலாசிரியராக மாறியவர் விவேக். 36 வயதினிலே, இன்று நேற்று நாளை, இறுதிச்சுற்று, இறைவி, அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், மனிதன், கபாலி, ரெமோ உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

Vijay Lyricist Vivek baby shower

விஜய் படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை எழுதி வரும் விவேக் தீவிர விஜய் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளப்போறான் தமிழன் முதல் சிங்கப்பெண்ணே வரை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஆளப்போறான் தமிழன் பாடல் விஜய்யின் அரசியல் கட்சியான தவெகவின் ஆந்தமாக கூட பயன்படும் அளவுக்கு அப்பவே அசத்தலான பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேக். சர்க்கார், பிகில், பீஸ்ட் மற்றும் வாரிசு உள்ளிட்ட பல விஜய் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிக் கொடுத்தவர் விவேக்.

விவேக் மனைவி வளைகாப்பு: 39 வயதாகும் விவேக் சாரதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், அவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்று விவேக் மற்றும் அவரது மனைவியை வாழ்த்தினர்.

விஜய் பங்கேற்பு: விஜய்யுடன் நெருக்கமாக பழகி வரும் பாடலாசிரியர் விவேக்கின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்துக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். குட்டி பாடலாசிரியர் பிறக்கப் போகிறாரா? அல்லது அழகான தேவதை பிறக்கப் போகிறாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் வாழ்த்தி வருகின்றனர். இயக்குநர் அட்லீயும் அந்த நிகழ்ச்சியில் விஜய்யுடன் கலந்துக் கொண்டார்.

குறைந்த வாய்ப்பு: லியோ மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு விவேக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் மட்டுமே ஒரே ஒரு பாடல் எழுதியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் படத்தில் பாடல் எழுதியுள்ள விவேக், கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X