நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
Recommended Video

சென்னை: ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஷ்வந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார்.
நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்துக்கும், ப்ரியங்காவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜய் வந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
விஜய்
ஃப்ரெண்ட்ஸ் படத்தில் தனது நண்பனாக நடித்த ரமேஷ் கண்ணாவின் வீட்டு விசேஷத்தில் விஜய் மிகவும் சிம்பிளாக கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மகிழ்ச்சி
ரமேஷ் கண்ணாவின் மகனை விஜய் வாழ்த்தியபோது எடுத்த புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வைரல்
ரமேஷ் கண்ணா மகன் திருமண வரவேற்பில் விஜய் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
சிரிப்பு
விஜய்யிடம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்தது இரண்டு விஷயம். ஒன்று அவரின் எளிமை, மற்றொன்று அவரின் ஸ்மைல்.


Click it and Unblock the Notifications











