Rajini Vs Vijay: என்ன சொல்றீங்க..விஜய் கையால் ரஜினி விருது வாங்கினாரா? இது எப்போ!
சென்னை : சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், விஜய் கையால் ரஜினி விருது வாங்கிய சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சரத்குமார், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்திருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் கூறியிருந்தார்.

சரத்குமாரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து: கிட்டத்தட்ட ஏழு மாதத்திற்கு முன் தொடங்கிய இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பிரச்சனை இன்றும் இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ரஜினிக்கு நிகராக விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எனக் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய போதும், விஜய் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருக்கிறார்.
ரஜினி சர்ச்சை பேச்சு: இதையடுத்து, ரஜினிகாந்த் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லைதான் என்றார்.மேலும், காக்கா கழுகு குட்டிக்கதையை பேசி இருந்தார். இதை கேள்விப்பட்ட பலரும் விஜய்யைத்தன் ரஜினி காக்கா என்றார். அவர் அவ்வாறு பேசி இருக்கக்கூடாது என்று பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ரஜினிக்கு விருது: இந்நிலையில், ரஜினிகாந்த் விஜய்யின் கையால் விருது வாங்கிய சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த மெர்சல் படம் வெளியான நேரத்தில் விகடன் விருது நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி,விஜய், கமல்,சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட இருந்தது.

ரஜினிக்கு விருது கொடுத்த விஜய் : ரஜினிக்கு யாரை வைத்து விருது கொடுக்கலாம் என்று அனைவரும் ஆலோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், விஜய்யை வைத்து இந்த விருது வழங்கிடலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ரஜினிகாந்திடம் கேட்ட போது அதுக்கு ரஜினிகாந்த் அவர்கள் ஓகே சொல்லியதால், விஜய்யின் கையால் ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
மாஸ்ஸுக்கு ஒரு பாஷா: ரஜினிக்கு விருது கொடுத்த விஜய், அந்த மேடையில், சூப்பர் ஸ்டாருக்கு விருது வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். அதை ரஜினி சார் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. டோனுக்கு ஒரு பில்லா, மாஸ்ஸுக்கு ஒரு பாஷா, கிளாஸ்க்கு ஒரு கபாலி அவர் என்னைக்குமே சூப்பர் ஸ்டார் தான் என்று பேசி இருந்தார். இந்த விஷயத்தை ரஜினியின் ரசிகர்கள் தேடி கண்டுபிடித்து தற்போது இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











