twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடவுளா? மிருகமா? கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி

    By Mayura Akilan
    |

    விஜய் விருது விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசனிடம் நீங்கள் கடவுளா? மிருகமா என்று கேள்வி கேட்டனர் தொகுப்பாளர்கள் அதற்கு கமல் சொன்ன பதில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    விஜய் விருது வழங்கும் விழா நாளையும், அடுத்தவாரமும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சி பற்றி கடந்த பல தினங்களாகவே முன்னோட்டங்கள் போடப்பட்டு வருகின்றன.

    நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. டிவியில் பார்க்கும் சின்னதாக ஒரு முன்னோட்டம்.

    தலைவா விஜய்

    தலைவா விஜய்

    'தலைவா' படத்துக்காக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் விருது பெற்றார் விஜய். ''ஒரு படத்தோட வெற்றியை மக்கள்தான் தீர்மானிக்கணும். ஜெயிச்ச படத்துக்கு விருது கிடைச்சிருந்தாக்கூட நான் இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன் என்றார்.

    வலைக்குள் விழக்கூடாது

    வலைக்குள் விழக்கூடாது

    ஜெயிச்சிருக்கவேண்டிய படம்னு மக்களே முடிவு செஞ்சு, இந்த விருது கொடுத்தது ரொம்ப சந்தோஷம். வெற்றிங்கிறது கோல் போடுற மாதிரி. கோல் போடும்போது பந்து மட்டும்தான் வலைக்குள்ள விழணும். பந்தோட சேர்ந்து நாமளும் வலைக்குள்ள விழுந்துரக் கூடாது.

    தல கணம் கூடாது

    தல கணம் கூடாது

    கிரீடம் எவ்வளவு கனமா இருந்தாலும், அதைத் தாங்குற தலையில கனம் இருக்கக் கூடாது!'' என்றெல்லாம் மனம் திறந்து விஜய் பேசப் பேச, அரங்கில் அமைதி ஏற்பட்டது. ஆனால் தல கணம் என்று சொன்ன உடன் அஜீத் ரசிகர்கள் இருந்த பக்கம் சலசலப்பு ஏற்பட்டது.

    கடவுளா? மிருகமா?

    கடவுளா? மிருகமா?

    சிறந்த நடிகர் மற்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குநர் விருதைப் பெற்ற கமலிடம், ''நீங்க கடவுளா... மிருகமா?'' என்ற கேள்வி. மைக்ரோ நொடி யோசித்தவர், ''ஒண்ணு கிடையாது... இன்னொண்ணா இருக்கக் கூடாது!'' என்று பட்டென்று சொன்னார்.

    உங்க ஃபேன்ஸ்தான்

    உங்க ஃபேன்ஸ்தான்

    சிறந்த என்டர்டெயினர் விருதை விஜயிடம் இருந்து பெற்றார் சிவகார்த்திகேயன். அவரிடம் பேசிய விஜய் ''உங்களுக்கு டான்ஸ் நல்லா வருது; ஆக்டிங் நல்லா வருது. காமெடி... சொல்லவே தேவையில்லை. என் பையனும் பொண்ணும்கூட இவர் ஃபேன்ஸ்தான். குட்டீஸ் எல்லாரையும் புடிச்சிட்டார்!'' என்று சொன்னார் விஜய்.

    நயன்தாராவை கடத்துவேன்

    நயன்தாராவை கடத்துவேன்

    சிறப்பு விருது பெற்ற விஜய் சேதுபதியிடம், ''இங்கே ஒரு ஹீரோயினைக் கடத்திட்டுப் போகணும்னா, யாரைக் கடத்திட்டுப் போவீங்க?'' என்று கேட்டதும், உடனே வந்தது பதில்... ''நயன்தாரா. அவங்க உள்ளே வர்றப்பவே பார்த்துட்டேன். ரொம்ப அழகா இருந்தாங்க!'' என்றார்.

    கூச்சப்பட்ட பாரதிராஜா.

    கூச்சப்பட்ட பாரதிராஜா.

    சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை 'பாண்டிய நாடு' படத்துக்காகப் பெற்ற இயக்குநர் பாரதிராஜா, '' 'நான் சினிமாவுக்கு நடிக்கத்தான் வந்தேன்'னு சொன்னப்ப சிவாஜி சார், 'ஏண்டா... நீ கண்ணாடியே பார்த்தது இல்லையா?'னு கேட்டார். ஆனா, இப்போ என் நடிப்புக்காக ஒரு விருதுனு நினைக்கும்போது ரொம்பக் கூச்சமா இருக்கு!'' என்றார்.

    பாலா நெகிழ்ச்சி

    பாலா நெகிழ்ச்சி

    'பரதேசி' படத்துக்காகச் சிறந்த இயக்குநர் விருதை, திருமதி அகிலா பாலுமகேந்திரா கையால் பெற்ற இயக்குநர் பாலா, ''அகிலா அம்மா, ஒரு குழந்தை மாதிரி. அவங்க கையால வாங்கின இந்த விருது, எனக்கு ஆஸ்கருக்குச் சமம்'' என்றார்.

    ஷாருக்கானை கடத்துவேன்

    ஷாருக்கானை கடத்துவேன்

    அதேபோல 'எந்த ஹீரோவை நீங்கள் கடத்துவீர்கள்?' என்று நயன்தாராவிடம் கேட்டபோது, அதிர்ச்சி ரியாக்ஷன் காட்டியவர் எந்தப் பதிலும் சொல்ல வில்லை. ரசிகர்களிடம் இருந்து எழுந்த 'ஷாருக்... ஷாருக்...' சிபாரிசையே பதிலாக அறிவித்தார் டி.டி.

    ஷங்கருக்கு சாதனை

    ஷங்கருக்கு சாதனை

    20 வருடங்களில் 11 படங்கள் மூலம் இந்திய அளவில் சாதனை படைத்ததற்காக, இயக்குநர் ஷங்கருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட ஷங்கர், ''இந்த விருதுக்கு நான் எவ்வளவு தகுதியானவன்னு தெரியலை. இனிமேலாவது எதையாவது உருப்படியா செய்யணும்னு நினைச்சுக்கிறேன்!'' என்று அடக்கமாக கூறினார்.

    சூர்யா ஸ்டார் கெஸ்ட்

    சூர்யா ஸ்டார் கெஸ்ட்

    ஸ்டார் கெஸ்டாக மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சூர்யா. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

    பாலுமகேந்திராவுக்கு சமர்பணம்

    பாலுமகேந்திராவுக்கு சமர்பணம்

    தமிழ் சினிமாவின் சிறந்த பங்களிப்புக்கான விருதை, மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம் செய்தது விஜய் அவார்ட்ஸ்.

    சலசலப்புக்கு இடையேயும்

    சலசலப்புக்கு இடையேயும்

    விஜய் விருது பற்றி பல்வேறு சர்ச்சைகள் சலசலப்புகள் இருந்தாலும் ஷாருக், டிடி, ஸ்ருதி, ஹன்சிகா, வாணி, அனிருத் ஆகியோரின் அட்டகாசமான நடனத்துடன் வண்ணமயமாக நடைபெற்றது என்கின்றனர் நேரில் பார்த்தவர்கள். பார்க்கமுடியாதவர்களுக்காக 20ம் தேதிவும், 27ம் தேதியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

    English summary
    The 8th Annual Vijay Awards which was held on 5th July 2014, which was was attended by an array of stars from the film industry, eminent directors, notable producers, top-notch technicians will be telecast for the fans on 20th July (Sunday) on Vijay TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X