பாட்ஷா ரீமேக்கில் விஜய்... ஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால்
சென்னை: பாட்ஷா ரீமேக் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரிஜினல் படத்தில் நடித்த காஜல் அகர்வால் ரீமேக்கிலும் விஜய் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
புதிதாக கதையை யோசித்து அதற்கு திரைக்கதை எழுதி மெனக்கெடுவதை விட தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த படங்களை ரீமேக் செய்வதுதான் இப்போது பேஷனாகி வருகிறது.
ஜெயம் ரவிதான் அதிக ரீமேக் படங்களில் நடித்தவர் என்று அறியப்பட்ட நிலையில் இப்போது அந்த லிஸ்ட்டில் விஜய் சேர்ந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆர்
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த படம் பாட்ஷா. ஏராளமான கரம் மசாலா சேர்க்கப்பட்டுள்ள இந்தப் படம் செம வசூலை அள்ளியுள்ளதாம்.

பி.வி.பி வாங்கிய தமிழ் ரைட்ஸ்
தெலுங்கு பாட்ஷாவின் தமிழ் பட ரைட்ஸ்சினை பி.வி.பி. சினிமா நிறுவனத்தின் பிரசாத் பொட்லூரி, வாங்கியிருக்கிறார்.

விஜய் நடிக்கும் பாட்ஷா
இந்த படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிவருவதான் செய்தியே. தலைவா சூட்டிங் முடிந்த உடன் இதற்காக டீல் முடிவாகுமாம்.

ரஜினி பாட்ஷாவுக்கு தொடர்பிருக்கா?
இந்த பாட்ஷாவிற்கும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாட்ஷாவிற்கும் எந்த தொடர்பும் இல்லையாம். ஆனால் ஒரு டிபிகல் மசாலா படத்துக்கு தேவையான அனைத்தும், இந்த படத்தில் இருக்கிறதாம்.

ஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால்
விஜய்யின் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்த காஜல்தான், தற்போது ஜில்லாவில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். பாட்ஷா, காஜல் அகர்வாலுக்கு ஒரிஜினல் படம் என்பதால், அதிலும் அவரே நடிக்க வாய்ப்பிருக்கும் பட்சத்தில் விஜய் ஹீரோயினாக ஹட்ரிக் அடிப்பார் என்கின்றனர்.

ஹவுஸ்புல் கல்லா
தெலுங்கு மசாலா இயக்குநர் ஸ்ரீனு வைத்லா பக்காவாக கொடுத்துள்ள பாட்ஷா, படத்தின் பட்ஜெட் 55 கோடியாம். ஆனால் முதல்நாளே, 13.5 கோடி ரூபா வசூலை அள்ளிய இந்தப் படம் இன்னமும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் அதேபோல் வெற்றி பெற வைக்கலாம் என்கின்றனர். விஜய் இந்தப்படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவருக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











