2019ல் அஜித்தை முந்திய விஜய்.. ரஜினிக்கு எத்தனாவது இடம் தெரியுமா? ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு!

Recommended Video

Bigil 50th day celebration | ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: 2019ம் ஆண்டு அதிக பிரபலம் வாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராத் கோலி இடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளார்.

இந்த பட்டியலில் நடிகர் அஜித்தை நடிகர் விஜய் சிறிய வித்தியாசத்தில் முந்தியுள்ளார். ஆனால், இவர்களை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணியில் உள்ளார்.

சூர்யாவுக்கு இடமில்லை

சூர்யாவுக்கு இடமில்லை

ஃபோர்ப்ஸ் இந்திய பிரபலங்கள் 100 பட்டியலில் இந்த ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு இடம் கிடைக்கவில்லை. சூர்யாவின் என்.ஜி.கே மற்றும் காப்பான் என இரண்டு படங்கள் வெளியான நிலையிலும் சூர்யாவிற்கு இந்த பட்டியலில் ஒரு இடம் கூட கிடைக்காதது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

சிவா இன்.. அட்லி அவுட்

சிவா இன்.. அட்லி அவுட்

2019ம் ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு படங்களை கொடுத்துள்ள நடிகர் அஜித் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தை பிடித்துள்ளார். அவரை விட தளபதி விஜய் சற்று முன் நிலையில் உள்ளார்.

போட்டோ ஏன் இல்லை

போட்டோ ஏன் இல்லை

ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள பிரபலங்கள் 100 பட்டியலில் அஜித் மற்றும் சிவாவின் போட்டோக்கள் ஏன் இடம்பெறவில்லை என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோவாக நடிகரின் அஜித்தின் ஒரு படம் கூடவா ஃபோர்ப்ஸ் கிட்ட இல்லை.

ஒரே படத்தில் ஓவர்டேக்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு இரு படங்கள் வெளியாகின. மேலும், அஜித்தின் சம்பளம் இந்த ஆண்டு 40 கோடி என ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ளது. ஆனால், பிகில் என்ற ஒரே படத்தில் நடித்து அஜித்தை ஓவர்டேக் செய்து இந்த பட்டியலில் நடிகர் விஜய் 30 கோடி சம்பளத்துடன் 47வது இடத்தை பிடித்துள்ளார். அஜித்தை விட விஜய் முன்னணியில் இருப்பதால், விஜய் ரசிகர்கள் இதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கமலை முந்திய ஷங்கர்

கமலை முந்திய ஷங்கர்

31.5 கோடி சம்பளத்துடன் இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் இயக்குநர் ஷங்கர் இந்த பட்டியலில் 55வது இடத்திலும், அதே இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன், 34 கோடியுடன் இந்த பட்டியலில் 56வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

13வது இடத்தில் சூப்பர்ஸ்டார்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட படம் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து, இந்த ஆண்டே தர்பார் படத்தின் ஷூட்டிங் மற்றும் மேக்கிங் முடிந்து படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், 100 கோடி சம்பளத்துடன் இந்த பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 13வது இடத்தில் உள்ளார். தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்திலும், நடிகர் ஆமிர்கான், மோகன் லால், பிரியங்கா சோப்ரா, ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்டோரையும் இந்த பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

விஜய்யின் பிகில் படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு மட்டும் ஏ.ஆர். ரஹ்மான் 94.8 கோடிகளை சம்பாதித்துள்ளாராம்.

தனுஷ் – கார்த்திக் சுப்பராஜ்

தனுஷ் – கார்த்திக் சுப்பராஜ்

பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தனுஷை வைத்து டி40 படத்தை இயக்கி வருகிறார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் நடிகர் தனுஷ் 31.75 கோடி சம்பளத்துடன் 64வது இடத்திலும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 13.5 கோடி சம்பளத்துடன் 84வது இடத்திலும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X