லண்டனில் நடக்கும் கத்தி இசை வெளியீட்டு விழாவில் விஜய், சமந்தா ஆட்டம்?
சென்னை: லண்டனில் நடக்க உள்ள கத்தி பட இசை வெளியீட்டு விழாவில் விஜய்யும், சமந்தாவும் சேர்ந்து டான்ஸ் ஆடப் போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் டைட்டில் கார்டு போடுகையில் இளைய தளபதிக்கு பதிலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்தப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியை அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. விஜய் இரட்டை வேடங்களில் வரும் இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்து வருகிறார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடக்கும் என்று பேசப்பட்டது.

லண்டன்
கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடப்பது உறுதியாகிவிட்டடது. விழா வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி லண்டனில் உள்ள வெம்ப்ளி அரினாவில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

டான்ஸ்
இசை வெளியீட்டு விழாவில் விஜய்யும், சமந்தாவும் சேர்ந்து டான்ஸ் ஆடப் போவதாக கூறப்படுகிறது.

அனிருத்
கத்தி மூலம் முதன்முதலாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். அனிருத்தும் விஜய்யுடன் சேர்ந்து லண்டன் விழாவில் டான்ஸ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

70 சதவீதம்
கத்தி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. படக்குழுவினர் ஒரு குட்டி பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பை துவங்கிவிட்டனர்.

சூப்பர் ஸ்டார்
கத்தி படத்தில் பெயர் போடும் போது விஜய்யின் பெயருக்கு முன்னால் இளைய தளபதிக்கு பதிலாக சூப்பர் ஸ்டார் என்று போடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரை
வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மதுரையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











