Vijay: விஜய்க்கு சான்ஸ் கொடுக்காமல் திருப்பி அனுப்பிட்டேன்... பாரதிராஜா சொன்ன அந்த காரணம்!
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் பாரதிராஜா.
ரசிகர்களால் இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா, ஏராளமான ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
அவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி ஹீரோக்களும் விரும்பியது உண்டு.
அப்படி தனது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்க்கு சான்ஸ் கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன் என பாரதிராஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யை திருப்பி அனுப்பிய பாரதிராஜா: 16 வயதினிலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் தொடங்கி தற்போது வெளியான மாடர்ன் லவ் சென்னை வரை பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கிராமத்து மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் மிக யதார்த்தமாக படமாக்கியது பாரதிராஜா தான்.
அதேபோல், ஸ்டுடியோவில் முடங்கிக் கிடந்த தமிழ்த் திரையுலகை அவுட்டோர் ஷூட்டிங் கூட்டிச் சென்று ரசிகர்களுக்கும் விருந்து படைத்த பிதாமகன் பாரதிராஜா. திரையுலகில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இன்றும் கொடிக்கட்டி பறக்கின்றனர். பாரதிராஜா செம்ம பிஸியாக இருந்த நேரத்தில் அவரிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்.
அதில் ஒருவராக தற்போதைய மாஸ் ஹீரோ விஜய்யும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும் பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். ஒரேகாலக்கட்டத்தில் இயக்குநர்களாக அறிமுகமான இருவரும் வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி மாஸ் காட்டினர். அப்போது ஒருமுறை பாரதிராஜாவை நேரில் சந்தித்த எஸ்.ஏ சந்திரசேகர், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
பாரதிராஜாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது விஜய்யை அழைத்த எஸ்.ஏ சந்திரசேகர், இதுதான் தனது மகன் என அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதோடு இல்லாமல் விஜய்யை நீங்கள் ஹீரோவாக அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் எனக் கேட்டுள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகரே ஒரு சூப்பர் ஹிட் இயக்குநர், அவரே தனது மகனுக்காக தன்னிடம் வாய்ப்புக் கேட்டதைப் பார்த்து பாரதிராஜா ஷாக்காகிவிட்டாராம்.

"நீயே இயக்குநர் தானப்பா, நீ ஏன் உன் மகனை வைத்து படம் இயக்கக் கூடாது" என பாரதிராஜாவும் திருப்பிக் கேட்டுள்ளார். அதோடு விஜய்க்கு சான்ஸ் கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டாராம் பாரதிராஜா. இதனை சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் பாரதிராஜா மனம் திறந்து கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இப்போ விஜய் தான் நம்பர் 1 ஹீரோ, இந்தச் சம்பவத்தை சில தினங்களுக்கு முன்னர் விஜய்யிடம் கூறி வருத்தப்பட்டேன் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார்.
மேலும், எஸ்.ஏ சந்திரசேகர் அப்படி வாய்ப்புக் கேட்டபோது விஜய் பற்றி எதுவுமே தோணவில்லை. அதனால் தான் அவரை தனது படத்தில் நடிக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என நேர்மையாக பதிலளித்துள்ளார் பாரதிராஜா. அவரின் இந்தப் பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











