நடிகர் விஜய்க்கு இந்தியில் பிறந்தநாள் சிடிபி.. பீஸ்ட் படம் மூலம் வட இந்தியாவில் அதிகரித்த ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று நடிகர் ஜெயம் ரவி விஜய்யின் பிறந்தநாள் சிடிபியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியிலும் நடிகர் விஜய்க்கு மிரட்டலான பிறந்தநாள் சிடிபி வெளியாகி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தென்னிந்திய மோகம்
பாலிவுட் ரசிகர்கள் சமீப காலமாக தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர். பாகுபலி படத்திற்கு பிறகு அதன் வீச்சு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2 படங்களுக்கு வட இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பாலிவுட் படங்களையே பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தின.

அதிகரித்த ரீமேக்
ரசிகர்களுக்கு மட்டுமின்றி பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் என அத்தனை பேருக்கும் தென்னிந்திய சினிமா மீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் பார்த்தால் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இயக்குநர் அட்லி ஷாருக்கானை வைத்து படம் இயக்குகிறார். புஷ்கர் - காயத்ரியின் விக்ரம் வேதா படத்தில் ஹிரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடித்து வருகின்றனர். சூரரைப் போற்று ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் சூர்யா நடித்து வருகிறார்.

விமர்சனத்தை தாண்டி
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கேஜிஎஃப் 2 திரைப்படத்துடன் மோதிய நிலையிலேயே வசூல் அளவில் அடிவாங்கியது என்றும் இரண்டு படங்களையும் கம்பேர் செய்து விமர்சித்த நிலையில் சொதப்பல் எனக் கூறப்பட்டதாகவும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமர்சனங்களை தாண்டி வட இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்களை பிடித்திருக்கிறார் நடிகர் விஜய் என்கிற விஷயம் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது

ஜூன் 22
ஜூன் மாதம் பிறந்தாலே சின்ராசை கையில் பிடிக்கவே முடியாது என்பது போல விஜய் ரசிகர்களை கையிலே பிடிக்க முடியாது. பிறந்தநாள் கொண்டாட்டத்தை Welfare Day என கொண்டாடி வரும் ரசிகர்கள் இந்த ஆண்டும் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்ய ஆர்வத்துடன் களத்தில் குதித்துள்ளனர். ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

வட இந்தியாவில் ரசிகர்கள்
விஜய் தி மாஸ்டர், ரா (பீஸ்ட்) படங்கள் மூலம் இந்தி திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை அள்ளி இருக்கிறார் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நம்ம ஊரில் எப்படியொரு கொண்டாட்டம் இருந்ததோ அதே போல பாலிவுட் பிரபலங்களும் அந்த பாடலுக்கு ரீல்ஸ் போட்டு அங்குள்ள ரசிகர்களை ஆட வைத்திருந்தனர். இந்நிலையில் வட இந்தியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த ஆண்டு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அட்டகாசமான சிடிபியை வெளியிட்டுள்ளனர்.

இந்தியில் சிடிபி
இந்தி திணிப்பை மட்டுமே இங்கே உள்ளவர்கள் எதிர்ப்பதை தெளிவாக பதிவு செய்து வருகின்றனர். இந்தி மொழியையோ, இந்தி ரசிகர்களையோ வட இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு மொழியையும் யாரும் வெறுக்க வில்லை. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியில் 'தளபதி விஜய்' என எழுதப்பட்டுள்ள கொடியுடன் விஜய் நிற்க, அருகே சிங்கம் ஒன்று இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை WWE இந்தி கமெண்டேட்டர் மிஹிர் ஜோஷி வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











