GOAT shots: அடேங்கப்பா!.. தளபதி, இளைய தளபதி ஒரே பைக்ல.. இதை விட வேற என்ன பர்த்டே ட்ரீட் வேணும்!

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ரசிகர்களுக்கு பிரம்மாண்ட திருவிழா போல உருவாகி வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் அட்டகாசமான ஷாட்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டை அர்ச்சனா கல்பாத்தி மற்றும் வெங்கட் பிரபு டீம் வெளியிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் விஜய்யின் உத்தரவை ஏற்று கள்ளக்குறிச்சியில் நலத்திட்ட உதவிகளை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vijay Vijay birthday GOAT Venkat Prabhu

ஆனால், வழக்கம் போல தனது நண்பாக்களுக்கும் நண்பிக்களும் சினிமா அப்டேட் கொடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை வேறலெவலில் கொண்டாட வைத்துள்ளார் தளபதி விஜய்.

ஹேப்பி பர்த்டே விஜய்: எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் தம்பதியினருக்கு மகனாக ஜூன் 22ம் தேதி 1974ம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

அப்பா, மகன் ஒரே பைக்ல: ரஷ்யாவில் படமாக்கப்பட்ட அதிரடி சேஸிங் ஸ்டண்ட் காட்சிகளில் அப்பா மற்றும் மகன் விஜய் ஒரே பைக்ல அமர்ந்துக் கொண்டு தங்களை துரத்துபவர்களை துப்பாக்கியை கொண்டு சுட்டுத் தாக்கும் அதிரடியான ஸ்டன்ட் சீனை வெளியிட்டு விஜய் பிறந்தநாளை தாறுமாறாக கொண்டாட வைத்துள்ளனர். கோட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டராக வெளியான அந்த காட்சி தான் படத்திலேயே செம ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா விஜய் வயதான லுக்கில் பைக் ஓட்ட, மகன் விஜய் செம யங்காக டீ ஏஜிங் உதவியுடன் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடும் வெறித்தனமான காட்சிகள் வெளியாகி உள்ளன.

ரெக்கார்டுகள் சிதறும்: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இறுதியாக அட்டகாசமான பிறந்தநாள் ட்ரீட்டை நள்ளிரவில் ரசிகர்களுக்கு தளபதி விஜய் கொடுத்துள்ள நிலையில், யூடியூபில் புதிய ரெக்கார்டுகளை இந்த படம் படைக்கும் என்றும் சிஜி காட்சிகள் தத்ரூபமாக உள்ளதாக ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X