Glimpse Decoding: இரட்டைக் கத்தி.. மெர்சல் லுக்.. ஜன நாயகன் பாலிடிக்ஸில் மிரட்டிவிடப்போகும் விஜய்!

சென்னை: நடிகர் தளபதி விஜய்யின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் படமான ஜன நாயகன் படத்தின் படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவரது ரசிகர்கள் இந்த கிளிம்ஸ் வீடியோவை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கிளிம்ஸ் வீடியோவின் மூலம் சில விஷயங்களை மறைமுகமாகவும் குறியீடுகளாகவும் விஜய் சொல்லுகிறார் என பார்க்கப்படுகிறது.

விஜய் கட்சி ஆரம்பித்து அரசியல் பேசியதை விட, கட்சி ஆரம்பிக்கும் முன்னர் தனது படங்களில் பேசிய பாலிடிக்ஸ் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. மேலும் அது அரசியல் தளத்தில் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியது. அப்படி விஜய் சமகால அரசியல் பேசிய படங்களில் அதிக கவனம் பெற்ற படங்கள் என்றால் அது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த கத்தி, சர்கார். அதேபோல் அட்லீ இயக்கத்தில் நடித்த மெர்சல்.

Vijay Birthday Special Jana Nayagan Glimpse Video Decoding With Political Perspective Connection With Previous Movies
Photo Credit:

ஜன நாயகன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள கிளிம்ஸ் வீடியோவில் விஜய் இரட்டைக் கத்திகளுடன் வருகிறார். அதேபோல் காவல்துறை உடையில் இருக்கும் விஜய்யின் மீசை மற்றும் முகம் கிட்டத்தட்ட மெர்சல் படத்தில் வருவதைப்போல உள்ளது. எனவே இந்த இரண்டு படங்கள் எந்த அளவுக்கு வீரியமாக அரசியல் பேசியதோ, அதைவிட கூடுதலாக ஜன நாயகன் படத்தில் விஜய் பல அரசியல் கருத்துக்களைப் பேசுவார். அதனால்தான் கிளிம்ஸ் வீடியோவில், இரட்டை கத்தியுடன் விஜய் காட்சி அளிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இரட்டை கத்தி: அதாவது கத்தி படத்தில் விஜய் பேசிய அரசியல் என்பது திமுகவை எதிர்த்து பேசுவதைப் போன்று இருந்தது. குறிப்பாக திமுக மீது அப்போது சுமத்தப்பட்ட 2ஜி முறைகேடு ஊழல் தொடர்பாக விஜய் டயலாக் பேசியிருப்பார். கத்தி படத்தில் விஜய் பேசியதைப் போல் இந்த படம் இரண்டு கத்தி படங்களுக்கு இணையாக இருக்கும் என்பதை மறைமுகமாக சொல்லவே கிளிம்ஸ் வீடியோவில் இவ்வாறு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

Vijay Birthday Special Jana Nayagan Glimpse Video Decoding With Political Perspective Connection With Previous Movies
Photo Credit:
மெர்சல் தளபதி: அதேபோல் மெர்சல் படத்தில் பாஜக அரசாங்கம் கொண்டு வந்த ஜி.எஸ்.டி குறித்து விமர்சித்து வசனம் பேசினார். மெர்சல் படத்தில் அவர் பேசிய வசனத்திற்கு தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. படத்திற்கு அதுவே தனி புரோமோசனாகவும் மாறிப்போனது. அதுபோலத்தான் ஜன நாயகன் படத்திலும் விஜய் பல அரசியல் வசனங்களை பேசவுள்ளார் என கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் ஜன நாயகன் என பெயர் வைத்துவிட்டு அரசியல் பேசவில்லை என்றால் எப்படி எனவும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X