ட்விட்டரில் விஜய்யின் பிறந்தநாள்...கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
சென்னை : ஜுன் 22 ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை எப்படி ஸ்பெஷலாக ஆக்குவது என பல்வேறு பிரபலங்கள் யோசித்து வருகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளன்று விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 65 படத்தில் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் டைரக்டர் நெல்சல் திலீப்குமார் வெளியிட உள்ளார்.

என்ன அறிவிப்பு வரும்
இதே போன்று தளபதி 65 படத்தின் தலைப்பு அல்லது படம் பற்றிய வேறு ஏதாவதொரு முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு கூட வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Save the date!❤️#CelebrateThalapathyWithRoute pic.twitter.com/06gP1fcSmu — TheRoute (TheRoute) June 19, 2021 '>
ட்விட்டரில் கொண்டாட்டம்
இதற்கிடையில் தற்போது லேட்டஸ்ட் அறிவிப்பாக விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் இணைந்து ட்விட்டர் டாக் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தி ரூட் நடத்த உள்ளது.
Recommended Video

பிரபலங்கள் இணையும் ட்விட்டர் டாக்
டைரக்டர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் விஜய்யுடன் பணியாற்றி அனுபவங்கள், பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க
நடிகை திவ்யதர்ஷினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். ஜுன் 21 அன்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுகோங்க என்ற வீடியோவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











