விஜய் பிறந்தநாள்.. 50 கிலோவில் பிரம்மாண்ட கேக்.. வெட்டிக் கொண்டாடுறது யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் விஜய் வரும் ஜூன் 22ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின்பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியினர் தான் பிரபல யூடியூப் சேனலில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று அந்த கேக்கை வெட்டுகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியினருக்கு மகனாக கடந்த 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய் சென்னையில் பிறந்தார். இந்த ஆண்டு தனது 50-வது பிறந்தநாளை விஜய் கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் விஜய் தொடர்பான ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு டிரெண்டு செய்து வருகின்றனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் 'கோட்' எனப்படும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வரும் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியையும் ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி விருது விழா எப்போது?: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு கல்வி விருது விழா ஒரு வாரத்துக்கு முன்பாகவே நடைபெற்றது. ஆனால் இன்னும் இரண்டு தினங்களில் விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், இன்னமும் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் மாணவர்களை சந்திக்கிறேன் என நடிகர் விஜய் அறிவித்த நிலையில், பிறந்தநாள் அன்று சந்திப்பாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய் 50: 1974 ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி பிறந்த நடிகர் விஜய் தனது 50-வது பிறந்தநாளை வரும் சனிக்கிழமை கொண்டாட காத்திருக்கிறார். இந்த வாரம் வெள்ளிக்கிழமை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளன. இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி திரைப்படம் அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. அந்த அளவுக்கு இந்த படங்கள் வசூல் செய்யுமா என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

50 கிலோ கேக்: நடிகர் விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை அழைத்து வந்து பிரம்மாண்ட பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர். மேலும், 50 கிலோவில் தயாரிக்கப்பட்ட பெரிய சைஸ் கேக்கையும் அவர்கள் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த கேக்கில் கோட் படத்தின் அட்டகாசமான போஸ்டர் இடம்பெற்றுள்ளது.
விஜய்க்கு அப்பாவின் சூப்பர் வாழ்த்து: 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள தனது மகன் விஜய் அடுத்ததாக அரசியலில் மிகப்பெரிய அடியை எடுத்து வைக்கவுள்ள நிலையில், அவர் நினைத்தது அனைத்தும் வெற்றியாகட்டும் என எஸ்.ஏ. சந்திரசேகர் வாழ்த்தியுள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காமன் டிபிக்கள் மற்றும் மாஷ் அப் வீடியோக்கள் வெளியாக காத்திருக்கின்றன. கோட் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெங்கட் பிரபு வெளியிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











