Vijay Birthday: விஜய் பர்த்டே செலப்ரேஷனில் அஜித், சூர்யா... இப்படியொரு சம்பவத்தை எதிர்பார்க்கலயே!
சென்னை: விஜய்யின் 49வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
மேலும், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவையும் தொடர்ந்து வெளியாகிறது.
இந்நிலையில், விஜய்யின் பர்த்டே செலப்ரேஷனில் அஜித், சூர்யா இருக்கும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் பர்த்டே செலப்ரேஷனில் அஜித், சூர்யா: விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் ஒருவரான விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள். அதேபோல், லியோ படக்குழுவும் அடுத்தடுத்து அப்டேட் வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறது. விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் தனது பிறந்ததினத்தை எப்போதுமே சிம்பிளாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் தான் இந்த வருடமும் ரொம்பவே சைலண்டாக பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், விஜய்யுடன் அஜித்தும் சூர்யாவும் கேக் வெட்டி பர்த்டே செலப்ரேட் செய்யும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. விஜய்யின் வலது பக்கம் அஜித்தும், இடது பக்கம் சூர்யாவும் இருக்கின்றனர்.
அஜித், சூர்யா நடுவே கேக் வெட்ட ரெடியாக இருக்கிறார் தளபதி விஜய். மூவருமே செம்ம ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து கெத்து காட்டுகின்றனர். ஆனால், இது விஜய் அஜித் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த போஸ்டரை ரசிகர்கள் அனைவரும் வைரலாக்கி வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டர் வெளியானது பலருக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

விஜய் எப்போதுமே நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அஜித்தின் தந்தை உயிரிழந்ததை அறிந்த விஜய், உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அஜித்தை சந்தித்த விஜய், அந்த புகைப்படங்கள் கூட வெளியே வராமல் பார்த்துக்கொண்டார். எந்த காரணம் கொண்டும் அஜித்தை சந்தித்தது விளம்பரமாகிவிடக் கூடாது எனவும் எச்சரிக்கையாக இருந்தார்.
அதேபோல், சூர்யாவின் ஆரம்ப காலத்தில் அவருக்கு அதிகளவில் சப்போர்ட் செய்ததில் விஜய்யும் ஒருவர். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் படத்தில் அவருடன் விஜய் இணைந்து நடித்திருந்தார். அதேபோல், சூர்யா நடித்த பெரியண்ணா படத்தில் அவருக்காக மூன்று பாடல்களையும் பாடியிருந்தார் விஜய். மேலும், ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யும் சூர்யாவும் நண்பர்களாக நடித்திருந்தனர். ரியலாகவும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யுடன் அஜித், சூர்யா இருக்கும் பேன்மேட் போஸ்டர் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











