Vijay: "விஜய் அதெல்லாம் பண்ண மாட்டாரா... இதென்ன ஒளிந்து ஆடும் அரசியல்?" விளாசிய ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

இன்னொருபக்கம் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்துக்காக ரெடியாகிவிட்டார் விஜய்.

Vijay: Blue Sattai Maran criticized Vijays political entry

இதனிடையே அரசியலில் களமிறங்கும் நோக்கத்துடன் விஜய் மக்கள் இயக்கம் அமைப்பையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், இது ஒளிந்து ஆடும் அரசியல் என விஜய்யை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

விஜய்யை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
கோலிவுட்டின் மாஸ் நடிகரான விஜய், சினிமாவை போல அரசியலிலும் களமிறங்கவுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார். இதனால், விஜய் விரைவில் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக தான் லியோ ஆடியோ லான்ச் கேன்சலானதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதெல்லாம் உண்மையில்லை என சொன்னபோதும், விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளன.

Vijay: Blue Sattai Maran criticized Vijays political entry

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அடுத்தடுத்து சில முன்னெடுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், மறைந்த காயிதே மில்லத்தின் நினைவு நாளில், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நாளை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2ம் தேதி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை கெளரவப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என, விஜய் மக்க இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Vijay: Blue Sattai Maran criticized Vijays political entry

இதனை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "சமீபத்தில் பெரியார் சிலைக்கு புஸ்ஸியார் உள்ளிட்ட ரசிகர்கள் மாலை போட்டனர். தற்போது காந்தி சிலைக்கும்!! ஏன்.. இந்த தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்ய மாட்டாரா? இதென்ன ஒளிந்து ஆடும் அரசியல்?" என காட்டமாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X