Vijay Ajith: சுறாவுக்கு பதிலடி கொடு தல... விஜய்க்கு எதிராக அஜித்தை தூண்டி விடும் ப்ளு சட்டை மாறன்
சென்னை: கடந்த 17ம் தேதி விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதை கலாய்த்து ப்ளு சட்டை மாறன் ட்வீட் செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு எதிராக அஜித்தை சீண்டிவிட்டு டிவிட் போட்டுள்ளார் ப்ளு சட்டை மாறன்.

விஜய்க்கு எதிராக அஜித்தை சீண்டும் ப்ளு சட்டை மாறன்:கடந்த இரு தினங்களாக விஜய்யின் கல்வி விருது விழா தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில், தொகுதி வாரியாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு விருதும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை நடிகர் விஜய்யே நேரில் பங்கேற்று மாணவர்களுக்கு வழங்கினார். முக்கியமாக முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லேஸ் பரிசளித்தார் விஜய். அதுமட்டுமின்றி கல்வியின் அவசியம் பற்றியும் அரசியல் குறித்தும் வெளிப்படையாக பேசியிருந்தார். முக்கியமாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதேபோல் தேர்தலில் ஓட்டுப் போட பணம் வாங்க வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். இதனையடுத்து கல்வி விருது விழாவில் விஜய் பேசியது அனைத்தும் ட்ரெண்டாகின. ஆனால், ப்ளு சட்டை மாறன் வழக்கம்போல வம்படியாக சென்று விஜய்யை ட்ரோல் செய்திருந்தார். "கட்அவுட், ப்ளக்ஸ் பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்ட்டர் ரேட்ல மட்டும் டிக்கட் வாங்குங்க... இத எப்ப சொல்லபோறீங்க.. கமாண்டர்" என விஜய்க்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
ப்ளு சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு விஜய் ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்கியது. இதனால் கடுப்பான அவர்கள் ப்ளு சட்டை மாறனை ட்ரோல் செய்து வந்தனர். ஆனாலும் அடங்காத ப்ளு சட்டை மாறன், இப்போது அஜித்தையும் சேர்த்து வம்பிழுத்துள்ளார். "தல.... பைக் டூர், ஏர்போர்ட்டில் வந்த ரசிகருடன் எளிமையாக போட்டோவுக்கு போஸ்னு கண்டன்ட்டை இறக்கி விடு. அப்பதான் சுறாவுக்கு பதிலடி தர முடியும். ரெண்டு நாளா எங்க பாத்தாலும் அவர்தான் வைரல். சீக்கிரம் போட்டோவை எறக்கு. இன்னைக்கு மண்டே வேற. ஏகப்பட்ட ஜோலி கெடக்கு" என ட்வீட் செய்துள்ளார்.

வடிவேலுவின் பேக்கரி காமெடி போஸ்டருடன் ப்ளு சட்டை மாறன் போட்டுள்ள இந்த ட்வீட், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய்யை கலாய்த்தது போதாது என ஒரே ட்வீட்டில் அஜித்தையும் சேர்த்து மரண பங்கம் செய்துள்ளது இருவரது ரசிகர்களையும் டென்ஷனாக்கியுள்ளது. கடந்த சில தினங்களாகவே அஜித்தின் போட்டோஸ் எதுவும் வைரலாகாததால் ப்ளு சட்டை மாறன் டைம்மிங்காக ட்வீட் செய்து மாஸ் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











