Vijay: “வேட்டைக்கும் ரெடி கோட்டைக்கும் ரெடி..” ரஜினி ஸ்டைலில் விஜய்... பொளந்து கட்டிய ப்ளூ சட்டை

சென்னை: லியோ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதனால், விஜய், லியோ, லோகேஷ், லோகேஷ் சினிமாட்டிக் போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், கோவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் "வேட்டைக்கும் ரெடி கோட்டைக்கும் ரெடி" என போஸ்டர் அடித்துள்ளனர்.

இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கலாய்த்துள்ளார்.

 Vijay: Blue Sattai Maran Troll Vijays Political Debut Like Rajini

ரஜினி ஸ்டைலில் விஜய்
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை முதல் ரிலீஸாக உள்ளது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு செம்ம ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வரவிருப்பதாக சொல்லப்படும் நிலையில், லியோ படத்தின் ரிலீஸ் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோ ஷூட்டிங் முடியும் வரை எந்த சிக்கல்களும் இல்லாமல் இருந்தன. ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. விஜய் தனது பெயரில் "விஜய் மக்கள் இயக்கம்" என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். அதனால், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால், அதன்பின்னர் லியோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழ்நாடு அரசு. அதுமட்டும் இல்லாமல் விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையே மோதல் என்ற செய்தியும் தற்போது பொய்யாகியுள்ளது. அதாவது லியோ படத்தை பார்த்துவிட்டு "தளபதி விஜய் அண்ணா, லோகேஷ் கனகராஜ், அனிருத் உட்பட லியோ படக்குழுவினருக்கு வாழ்த்து" என ட்வீட் செய்திருந்தார் உதயநிதி.

ஆனாலும் அடங்காத விஜய் ரசிகர்கள், தளபதியின் அரசியல் என்ட்ரி பற்றி தாறுமாறாக போஸ்டர் அடித்து அட்ராசிட்டி செய்து வருகின்றனர். அதன்படி கோவையில் உள்ள விஜய் ரசிகர்கள் கொஞ்சம் உக்கிரமாகவே களமிறங்கியுள்ளனர். "வேட்டைக்கும் ரெடி கோட்டைக்கும் ரெடி" என ரைமிங்காக போஸ்டர் அடித்து லியோ படத்துக்கு ப்ரொமோஷன் செய்துள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 Vijay: Blue Sattai Maran Troll Vijays Political Debut Like Rajini

இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், "Same Rajini technique. He won't start a political party at least for the next 10 years.'அரசியலுக்கு வருவது உறுதி. தேதி பல வருடம் கழித்து அறிவிக்கப்படும்" என விஜய்யை கலாய்த்துள்ளார். அதாவது ரஜினியின் அதே டெக்னிக்கை விஜய் பயன்படுத்துவதாகவும், அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு அரசியல் கட்சி தொடங்கமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு விஜய் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X