Vijay: "மாமா தளபதி விஜய்யின் லியோ தாறுமாறு.." வைப் கொடுத்த 2K பூமர்... ப்ளூ சட்டை ரியாக்‌ஷன்

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பான் இந்தியா படமாக வெளியான லியோ, இதுவரை 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

 Vijay: Blue Sattai Maran trolled a 2K Boomer fan who celebrated Vijays Leo movie

இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், விஜய் ரசிகர்கள் தினமும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி விஜய் தனது மாமா என வைப் கொடுத்த ரசிகையை, 2கே பூமர் என ப்ளூ சட்டை மாறன் பங்கம் செய்துள்ளார்.

மாமா தளபதி விஜய்யின் லியோ தாறுமாறு
விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ, கடந்த 19ம் தேதி ரிலீஸானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU-ன் கீழ் உருவான இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் லியோவுக்கு முதல் நாளில் மட்டும் தரமான ஓபனிங் கிடைத்தது. கலவையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் தடுமாறத் தொடங்கியது.

ஆறு நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. இதனால், லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் டல்லடிக்கத் தொடங்கியதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அக்டோபர் இறுதி வரை லியோ டிக்கெட்டுகள் கிடைக்க வாய்ப்பே இல்லை என சொல்லப்பட்ட நிலையில், ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் கூட லியோ காத்து வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறியுள்ளன.

சென்னை, கொச்சின், திருவனந்தபுரம், பெங்களூர் போன்ற மெட்ரோ சிட்டிகளில் கூட இன்று லியோவுக்கு பெரிய வரவேற்பு இல்லை. இதனால், பெரும்பாலான தியேட்டர்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் இன்று முதல் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியதால், மாணவர்கள் பலர் லியோ ஓடும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அப்போது விஜய்யின் ரசிகை செய்த அட்ராசிட்டி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

காலேஜ் செல்லாமல் கிளாஸை கட் அடித்துவிட்டு லியோ பார்க்கச் சென்றுள்ள மாணவி ஒருவர், "விஜய் தான் தனது மாமா, என் மாமா விஜய் நடித்துள்ள லியோ பார்க்க வந்தேன். லியோ சும்மா தாறுமாறு... தளபதி கண்ண பார்த்தாலே சும்மா தாறுமாறு... லியோ படத்த தியேட்டர்ல வந்து பாருங்க... மாமா தளபதி மாஸ் காட்டிருக்கார்... விஜய் - த்ரிஷா கெமிஸ்ட்ரி செம்மையா இருக்கு."

"லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் சூப்பரா டைரக்ட் பண்ணிருக்கார். மாமா தளபதிக்காகவே லியோ ஆயிரம் கோடி வசூலிக்கும். விஜய்க்காக காலேஜ் கட் அடிச்சிட்டு வந்துருக்கேன்.." என செம்ம வைப் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், 2கே பூமர் என ஒரே வார்த்தையில் பங்கம் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X