Vijay: பீஸ்ட் பார்த்தே உயிரோட தான் இருக்கேன்... விஜய் ரசிகரை வெறி ஏத்திவிட்ட ப்ளு சட்டை மாறன்
சென்னை: இரு தினங்களுக்கு முன்னர் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதற்கு முன்னதாக 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கியிருந்தார்.
அப்போது தனது அரசியல் பயணம் குறித்து பேசிய விஜய்யை ப்ளு சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்.
இதுகுறித்து டிவிட் செய்திருந்த விஜய் ரசிகருக்கு, ப்ளு சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.

பீஸ்ட் பார்த்தே உயிரோட தான் இருக்கேன்:ஜூன் 22ம் தேதி விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு லியோ படத்தின் விஜய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகின. முன்னதாக அவர் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கி பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார். தொகுதி வாரியாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு விருதுகள் வழங்கி மாணவர்கள் முன் பேசினார். அப்போது அவர் அரசியல் என்ட்ரி குறித்து சூசகமாக பேசியிருந்தார். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து அதிகம் படிக்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காதீர்கள் என அரசியல் குறித்தே அதிகம் பேசியிருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவு, எதிர்ப்பு என இரண்டுமே சரிசமமாக வெளிவந்தன. அதேபோல், ப்ளு சட்டை மாறனும் விஜய்யை ட்ரோல் செய்து டிவிட் போட்டிருந்தார். அதில், "காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க - கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை" என கேப்ஷன் கொடுத்திருந்த அவர், 'கட்அவுட், ப்ளக்ஸ் பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்ட்டர் ரேட்ல மட்டும் டிக்கட் வாங்குங்க" என எப்போது சொல்வீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து விஜய்யின் அரசியல் பயணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டே வந்தார். இதனால், கடுப்பான விஜய் ரசிகர்கள் ப்ளு சட்டை மாறனை அதிகமாக ட்ரோல் செய்து வந்தனர். அதில் ஒரு ரசிகர், "அரசியலுக்கு வரும் முன்னே இப்படி கதறினால், வந்துவிட்டால் உயிரை விட்டுவிடுவாய் போல" என்பதாக ப்ளு சட்டை மாறனை கலாய்த்திருந்தார்.
ஆனால், இந்த ரசிகரை தனது லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், "பீஸ்ட் பாத்ததுக்கு அப்பறமும் உயிரோடதான்டா இருக்கேன்" என தமாஸாக பதிலடி கொடுத்துள்ளார். கடந்தாண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியடைந்தது. வசூலில் முதலுக்கு மோசம் இல்லையென்றாலும், நெகட்டிவான விமர்சனங்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது பீஸ்ட். இதனை அடிப்படையாக வைத்து ப்ளுசட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











