Vijay: கட்அவுட் ப்ளக்ஸ் பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க... விஜய்யை வம்பிழுக்கும் ப்ளு சட்டை மாறன்

சென்னை: விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது விழா நடத்தப்பட்டது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது பேசிய விஜய், தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது என அறிவுரை வழங்கினார்.

விஜய்யின் இந்த கருத்து வைரலாகி வரும் நிலையில், ப்ளு சட்டை மாறன் இதனை ட்ரோல் செய்துள்ளார்.

 Vijay: Blue Sattai Maran trolled Vijay about money for voting

கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை:லியோ படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய், இன்று மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு விருது வழங்கினார். தொகுதி வாரியாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

மாணவி நந்தினிக்கு வைர நெக்லேஸ் பரிசளித்த விஜய், தேர்வில் சிறந்த மார்க் எடுத்தவர்களுக்கு விருதும் ஊக்கத் தொகையும் வழங்கினார். முன்னதாக மேடையில் பேசிய விஜய், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது அசுரன் படத்தில் இடம்பெற்ற "காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, பணம் இருந்தா புடுங்கிடுவானுங்க, படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது" என்ற வசனம் பேசி மாஸ் காட்டினார்.

மேலும், அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து அதிகம் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதேபோல், வருங்கால தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நீங்கள், தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காதீர்கள் என அன்புக் கட்டளையிட்டார். விஜய்யின் இந்த பேச்சு இணையத்தில் கேட்கப்பட்டதற்கு, விஜய் சரியாகதான் சொல்லியிருப்பதாகக் கூறினார்.

 Vijay: Blue Sattai Maran trolled Vijay about money for voting

விஜய்யின் இந்த கருத்து அவரது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ப்ளு சட்டை மாறன் வம்படியாக சென்று ட்ரோல் செய்துள்ளார். அதன்படி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க - கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை" என கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும், 'கட்அவுட், ப்ளக்ஸ் பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்ட்டர் ரேட்ல மட்டும் டிக்கட் வாங்குங்க... இத எப்ப சொல்லபோறீங்க.. கமாண்டர்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என சொல்லும் விஜய், அவரது படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைக்க மிகப் பெரிய தொகையை செலவு செய்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் படங்கள் வெளியாகும் போது தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார். விஜய்யை ப்ளு சட்டை மாறன் வம்பிழுக்கும் இந்த டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X