Vijay: "கமாண்டரின் களப்பணி...கப்பு முக்கியம் என ஈயம் பூசுதல்” விஜய்யை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

அதில் பேசிய விஜய் தனது அரசியல் வருகை குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், விஜய் அரசியலுக்கு எப்போது வருவேன் என்று சொல்லாமல் பம்முவதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

 Vijay: Blue Sattai Maran trolled Vijays political entry

கமாண்டரின் களப்பணியை விமர்சித்த ப்ளூ சட்டை
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய், கடந்த சில வருடங்களாக அரசியலில் களமிறங்கும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலம், தனது ரசிகர்களை சமூகப் பணிகளில் களமிறக்கி வருகிறார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் என்பது, அறிக்கப்பட்டாத அரசியல் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. இப்படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். அதேபோல், சினிமாவை விட அரசியல் குறித்தே அதிகம் பேசியிருந்தார். இதனால், விஜய் விரைவில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 234 தொகுதிகளில் முதல் இரண்டு இடம் பிடித்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசும் நிதியுதவியும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் ஆசை குறித்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது விஜய் அரசியலுக்கு வரும் முன்னர் களப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் அட்வைஸ் செய்திருந்தார்.

 Vijay: Blue Sattai Maran trolled Vijays political entry

இதனை குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், "இதுதான் கமாண்டரின் களப்பணிகள்" என ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளார்.
அதில், "ஆடியோ லாஞ்ச், சக்ஸஸ் மீட்டில் குட்டிக்கதை சொல்வது, கப்பு முக்கியம் என ஈயம் பூசுதல்‌."
"அரசியலுக்கு எப்போது வருவேன் என்று சொல்லாமல் பம்முதல்."
"மணிப்பூர், வேங்கைவாசல், விலைவாசி ஏற்றம், ப்ளாக் டிக்கட் என எதுபற்றியும் பேசாமல் இருத்தல்."
"தியேட்டரை நாசம் செய்யும் ரசிகர்களை கண்டிக்காமல் இருத்தல்."
"தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க நேரடியாக போகாமல்.. மன்றத்தினரை அனுப்புதல்."
"கட்சி ஆரம்பிப்பது பற்றி இதுவரை ஒரு ப்ரெஸ்மீட் கூட வைக்காமல் பதுங்கி இருத்தல்." என விமர்சித்துள்ளார்.

 Vijay: Blue Sattai Maran trolled Vijays political entry

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், அங்கேயும் விடாமல் விஜய்யை ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X