Vijay: “பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது..” விஜய் குட்டிஸ்டோரி... ரஜினிக்கு பஞ்ச் கொடுத்த ப்ளூ சட்டை

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், விஜய், த்ரிஷா, லோகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

லியோ வெற்றி விழாவில் இறுதியாக பேசிய விஜய், தனக்கே உரிய பாணியில் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டினார்.

இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது" என ரஜினியை பங்கமாக கலாய்த்துள்ளார்.

 Vijay: Blue Sattai Maran who trolled Rajini in Vijays Kutty Story

பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது: மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணியில் இரண்டாவதாக உருவான திரைப்படம் லியோ. இந்தாண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் லியோ தான் டாப்பில் இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸான லியோ, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய விஜய் வழக்கம் போல தனது ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்லி வைப் கொடுத்தார். அதாவது "ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு."

 Vijay: Blue Sattai Maran who trolled Rajini in Vijays Kutty Story

"இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயக்களுக்கு கனவு காணுங்க." என விஜய் தனது குட்டி ஸ்டோரியில் சில ட்வீஸ்ட் வைத்து முடித்தார். இதனை வைத்து ரஜினியை பங்கம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதாவது "பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது" என ஒரே வார்த்தையில் ரஜினியை சோலி முடித்துள்ளார்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி வைரலானது. அதில் காகம், பருந்து என தனது சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு வைப் கொடுத்திருந்தார். இப்போது விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியில் ரஜினியை மறைமுகமாக அட்டாக் செய்துவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X