Vijay: "தளபதி விஜய்ன்னு சொல்லுங்க... அவர அதுக்காகவே ரொம்ப பிடிக்கும்” க்யூட்டா சொன்ன பாலிவுட் நடிகை

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் குறித்து பாலிவுட்டின் முன்னணி நடிகை மனம் திறந்து பேசியது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தான் மை ஃபேவரைட்
தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய், சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்க முடிவு செய்துள்ளார். வாரிசு, லியோவை தொடர்ந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் என படக்குழு அறிவித்துவிட்டது. இந்த மூவி ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 Vijay: Bollywood actress Katrina Kaif has opened up that she likes Vijay for dancing

இதனைத் தொடர்ந்து விரைவில் அட்லீ இயக்கும் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அட்லீ, ஷாருக்கானுடன் இணைந்தால், அதுவே விஜய்யின் முதல் பாலிவுட் என்ட்ரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் குறித்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மனம் திறந்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கத்ரீனா கைஃப்.

தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்தாண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகவிருந்த இந்தப் படம், தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதன்படி, அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்குப் போட்டியாக வரும் 12ம் தேதி மெர்ரி கிறிஸ்துமஸ் ரிலீஸாகிறது. இதனையடுத்து இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் நடைபெற்ற மெர்ரி கிறிஸ்துமஸ் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கத்ரீனா கைஃப், தமிழில் எனக்கு விஜய் தான் ரொம்ப பிடிக்கும் எனக் கூறியுள்ளார். விஜய் குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதும், "தளபதிய தான சொல்றீங்க... அவரு தளபதி விஜய்" என க்யூட்டாக ரியாக்‌ஷன் கொடுத்தார் கத்ரீனா கைஃப். பின்னர் விஜய்யுடன் கோக்கோ கோலா விளம்பரத்தில் நடித்துள்ளது பற்றியும் மனம் திறந்தார்.

அந்த விளம்பரம் தான் எனக்கு முதல் அனுபவம் என்பதால், என்னால் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. அப்போது விஜய்யின் டான்ஸ் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அன்று முதல் நான் விஜய்யின் ரசிகையாகவே மாறிவிட்டேன் என மனம் திறந்துள்ளார் கத்ரீனா கைஃப். முன்னதாக மெர்ரி கிறிஸ்துமஸ் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், இந்தி மொழி திணிப்பு குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தது வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X