Vijay : சங்கீதா பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்.. அவ்வளவு வொர்த் இல்லை.. மகளிர் தின கொண்டாட்டத்தில் விஜய்!

மாமல்லபுரம்: தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா குறித்து பேசினார். அதாவது அவரது விவாகரத்து வழக்கு குறித்து பேசினார். அதில், இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பிரச்னை குறித்து நீங்கள் எனக்காக சண்டை போட்டுக் கொண்டு இருக்குறீர்கள். சிலர் அழவெல்லாம் செய்கிறீர்கள். அவ்வளவு கஷ்டப்படவேண்டாம், அந்த அளவுக்கு வொர்த் இல்லை. நான் அதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன், நாம் அனைவரும் சேர்ந்து மக்கள் பிரச்னையைப் பார்க்கலாம்” என்று பேசி உள்ளார்.

Vijay Breaks Silence on Divorce Issue During Women s Day Event about Sangeetha is not Worth


கடந்த வாரத்தில் இருந்தே நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் குறித்த பேச்சாக இருப்பது, அவரது மனைவி நீதிமன்றத்தில் அளித்துள்ள விவாகரத்து மனு குறித்து தான். தனது விவாகரத்து மனுவில், விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார். நான் அதைக் கண்டுபிடித்து கண்டித்துவிட்டேன், ஆனாலும் அவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் சுற்றிக் கொண்டு உள்ளார். நடிகையுடனான புகைப்படங்களை பொது வெளியில் பகிர்கிறார். அவை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பெரும் மனக்கவலையை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியது, ஆனால் சங்கீதா தனது விவாகரத்து மனுவில், விஜய் நடிகையுடனான திருமணத்தை மீறிய உறவில் இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் உள்ளது. விஜய் தரப்பில் எனக்கு அழுத்தம் கொடுத்தால் நடிகையின் பெயரை வெளியே சொல்லுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவாகரத்து வழக்கு முடியும் வரை நான் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், விஜய்யின் வருமானத்திற்கு ஏற்ற வகையில் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அந்த விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: சங்கீதாவின் இந்த குற்றச்சாடுகளை அடுத்து விஜய்க்கு ஆதரவாக பேசிக் கொண்டு இருந்த பலரும் விஜய்க்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் பலர் சங்கீதாவின் இந்த செயல் திமுகவின் சதித் திட்டம் என்று எல்லாம் தெரிவித்தார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் திருமண விழாவுக்குச் சென்றார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும், மற்றவற்றிக்கு எல்லாம் நாங்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தோம், ஆனால் இந்த விஷயத்துக்கு என்னவென்று முட்டுக் கொடுப்பது என்று தெரியவில்லை என்று பகிரங்கமாகவே பேசி வீடியோ பதிவிட்டனர். மேலும் பலர் சமூக வலைதளங்களில் விஜய்யின் செயல் மிகவும் மோசமானது என்று விமர்சிக்கத் தொடங்கினர்.

Vijay Breaks Silence on Divorce Issue During Women s Day Event about Sangeetha is not Worth

வொர்த் இல்லை: இப்படி இருக்கையில் இது தொடர்பாக தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் பேசுகையில், “ இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பிரச்னை குறித்து நீங்கள் போராடிக் கொண்டு இருக்குறீர்கள். சிலர் மனவேதனை அடைகிறீர்கள், அதைப் பார்த்தால் எனக்கு மனவேதனையாகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும் நானும் சேர்ந்து மக்களின் பிரச்னையை மட்டும் பார்க்கலாம். அந்த அளவுக்கு வொர்த் இல்லை” என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X