பற்றி எரியும் சங்கீதா பஞ்சாயத்து.. கொந்தளித்த விஜய்.. சாட்டையடி கேள்வியா கேட்டிருக்காரே ப்பா!

சென்னை: நடிகர் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதி இந்த மனுவானது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் ட்விட்டர் பதிவு ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சில நாட்களுக்கு முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'விஜய்யிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும். என்னை அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதளவில் பிரிந்து வாழ்கிறார். அதனை கருத்தில் கொண்டு விவாகரத்து கொடுக்க வேண்டும். அவர் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அதை நான் கண்டுபிடித்து கேட்டபோது இனிமேல் அந்த நடிகையுடன் பழகமாட்டேன் என உறுதி கொடுத்தார். ஆனால் செயல்பாடில் எந்த மாற்றமும் இல்லை.

Vijay Breaks Silence With Political Tweet Amid Ongoing Divorce Row
Photo Credit:

குடும்பத்துக்கு அவமானம்: இரக்கமே இல்லாமல் உறவை தொடர்ந்தார். நடிகையும் என்னுடைய கணவருடன் வெளிநாடுகளுக்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தார். அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்துக்கும் அவமானத்தை கொடுத்தது. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை சொல்லவில்லை. நடிகையுடன் உறவை தட்டிக்கேட்டதால் என்னை விஜய் சுதந்திரமாக நடமாடவில்லை. பொருளாதார நெருக்கடியையும் கொடுத்தார்.' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

அமைதி காக்கும் விஜய்: இவ்விவகாரம் தமிழ்நாட்டில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் விஜய்யோ அமைதிதான் காத்துவருகிறார். இது ஒருபக்கம் இருக்க விஜய்யின் தொண்டர்களும், ரசிகர்களும் சங்கீதாவையே தரக்குறைவாக பேசுகிறார்கள். அதையாவது தடுப்பதற்கு விஜய் தன்னுடைய மௌனத்தை கலைக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. இந்நிலையில் நாங்குநேரியில் நடந்த படுகொலை குறித்து ட்வீட் செய்திருக்கிறார் விஜய்.

விஜய்யின் ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

Also Read
பட்டம் வாங்கிய விஜய் மகள் திவ்யா சாஷா.. அண்ணன் ஜேசன் சஞ்சய் பங்கேற்ற காட்சிகள் வைரல்..செம பிணைப்பு
பட்டம் வாங்கிய விஜய் மகள் திவ்யா சாஷா.. அண்ணன் ஜேசன் சஞ்சய் பங்கேற்ற காட்சிகள் வைரல்..செம பிணைப்பு

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில்காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?

பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X