மல்டி பிளக்ஸ் தியேட்டர் கட்டுகிறாரா விஜய்?.. அதுவும் அந்த இடத்திலா?.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விரைவில் விலகி அரசியலுக்குள் நுழையப் போவதாக அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தின் கடைசியாக நடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக மக்களுக்கான சேவையில் இறங்கப் போவதாக விஜய் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியில் ஆர்வம் செலுத்தி வரும் விஜய் தொழில் துறையிலும் ஈடுபாடு செய்யப் போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
நீலாங்கரையில் பள்ளிக்கூடம்: நடிகர் விஜய் பெரிய அளவிலான பள்ளிக்கூடம் ஒன்றை நீலாங்கரையில் உருவாக்கி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அது ஒரு பள்ளிக்கூடம் இல்லை என்றும் டாம் க்ரூஸ் கட்டியுள்ள வீடு போன்று சென்னையில் விஜய் தட்டி வருகிறார் என்றும் பல்வேறு தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், அடுத்ததாக நடிகர் விஜய் தியேட்டர் ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் மல்டிபிளக்ஸ்: அதுவும் தமிழ்நாட்டில் அல்லாமல் புதுச்சேரியில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை நடிகர் விஜய் கட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதற்காகத்தான் சில மாதங்களுக்கு முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் விஜய் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நடிகர் விஜய் தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவை விட்டு விலகினாலும் தியேட்டர் பிசினஸ் மூலம் சம்பாதிக்கலாம் விஜய் நினைத்துள்ளாரா? என்றும் கேட்டு வருகின்றனர்.
திரிஷாவுடன் டான்ஸ்: லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா அந்த படத்தில் விஜய்யுடன் டான்ஸ் ஆட முடியவில்லையே என்றும் லோகேஷ் கனகராஜ் படத்தில் அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் விஜய் மற்றும் திரிஷா வெற்றி விழாவில் பேசிய நிலையில், விஜய்யுடன் குத்தாட்டம் ஒன்றை கோட் படத்தில் திரிஷா போட்டுள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.
எச். வினோத் தானா?: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை கொடுத்த எச். வினோத் தான் விஜய்யின் 69வது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட இயக்குநர்கள் சொன்ன கதைகள் விஜய்க்கு பிடிக்காமல் ரிஜெக்ட் செய்து விட்டதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











