விஜய்யை பார்க்க மூன்று கிலோமீட்டர் சாக்கடையில் பயணம்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க?

கன்னியாகுமரி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொண்டார். அவரை காண்பதற்கு வழக்கம்போல் கூட்டம் கூடியது. மேலும் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டவும் செய்த அவர்; தன்னை நோக்கி மக்கள் கூட்டமாக வருவதை பார்த்து மீண்டும் பரப்புரை வாகனத்துக்குள் சென்றுவிட்டார். இந்நிலையில் அவரை காண்பதற்கு ரசிகர் ஒருவர் மூன்று கிலோமீட்டர் சாக்கடையில் நீந்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் பத்து நாட்களில் நடக்கவிருக்கிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சியினரும் பரப்புரையில் மும்முரம் காட்டிவருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் போட்டியிடவிருந்த தவெக வேட்பாளர் மாயமாகிவிட்டார். அது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சதிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. விஜய் திருச்சி கிழக்கிலும், பெரம்பூரிலும் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Campaign in Kanyakumari Fan Swims 3 Km Through Drain to See Him
Photo Credit:

வெல்வாரா விஜய்?: இந்தத் தேர்தலில் விஜய் வெல்வாரா என்பதில்தான் அனைவருக்கும் ஆவல் இருக்கிறது. விஜயகாந்த் மாதிரி முதல் தேர்தலிலேயே தனக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபிப்பாரா இல்லை எந்தத் தொகுதியிலும் டெபாசிட் வாங்காமல் காலியாகிவிடுவாரா என்பது இன்னும் 20 நாட்களில் தெரிந்துவிடும். அதேசமயம் ஒரு தொகுதியிலாவது வென்றுவிட வேண்டும் என்றுதான் அவர் இரண்டு தொகுதிகளில் களமிறங்கியிருப்பதாகவும் தெரிகிறது.

பரப்புரையில் தீவிரம்: இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தமிழ்நாட்டில் பரப்புரையையும் தொடங்கினார் விஜய். ஆனால் இடை இடையே அவர் விடுமுறை எடுப்பதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் காரணமாக முதலில் அவரது பொம்மையை வைத்து பரப்புரை செய்தார்கள் சில தவெக தொண்டர்கள். அதேபோல் நேற்று கும்பகோணத்தில் ஹாலோகிராம் மூலம் விஜய்யை கொண்டு வந்து வேட்பாளர் பிரசாரத்தை மேற்கொண்டார். இதை நினைத்து சிரிப்பதா இல்லை பெருமைப்படுவதா என தெரியாமல் தவெக தொண்டர்கள் திணறுகிறார்கள்.

Also Read
தமிழ்நாடு அரசியலில் மாற்றம் இருக்கனும்.. பா. ரஞ்சித் சொன்ன கருத்து.. விஜய்க்கு ஆதரவா?
தமிழ்நாடு அரசியலில் மாற்றம் இருக்கனும்.. பா. ரஞ்சித் சொன்ன கருத்து.. விஜய்க்கு ஆதரவா?

கன்னியாகுமரியில் பரப்புரை: நேற்று கன்னியாகுமரிக்கு சென்று பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் விஜய். அப்போது திடீரென சைக்கிளையும் ஓட்டினார். ஏற்கனவே காரைக்குடி பரப்புரையின்போது சைக்கிள் ஓட்டினார். அப்போது கூட்டம் அதிகம் கூடியதால் தடுமாறி கீழே விழவும் போனார். இந்த முறை அப்படி இல்லை. நெடுஞ்சாலையில் ஜாலியாக ஓட்டிக்கொண்டு சென்றார். அதேசமயம் தன்னை நோக்கி மக்கள் கூட்டமாக வருவதை பார்த்த அவர்; உடனடியாக சைக்கிளிலிருந்து இறங்கி பரப்புரை வாகனத்துக்குள் சென்றுவிட்டார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.

சாக்கடையில் பயணம்: இந்நிலையில் நேற்றைய விஜய் வருகையின்போது தவெக தொண்டரும், விஜய் ரசிகருமான ஒருவர் செய்திருக்கும் செயல் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. அதாவது ஒரு நபர் விஜய்யை பார்ப்பதற்காக மூன்று கிலோமீட்டர்கள் சாக்கடையில் நீந்தி வந்திருக்கிறார். இதை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும் நெட்டிசன்களோ இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள். இதையெல்லாம் விஜய் ஊக்கப்படுத்தக்கூடாது உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்க தொடங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X