விஜய் பிரச்சாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்.. பவுன்சர் கையில் இருக்கும் ‘சூட்கேஸ்’ உண்மையில் என்ன?
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் போது, அவருடன் இருக்கும் பவுன்சர்கள் எப்பொழுதுமே ஒரு பேக்கை கையில் வைத்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம். பெரும்பாலானோர், அது விஜய் பேசும்போது பார்க்க பயன்படுத்தும் குறிப்புகள் வைத்திருக்கும் ஒரு சாதாரண பேக் (bag) என்று நினைத்து இருக்கிறார்கள். குறிப்பாக, அவர் அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேச தயாராக இருப்பதால், அதற்கான நோட்ஸ் வைத்திருக்கும் பேக் என பலர் கருதுவார்கள் உண்மையில் அது என்ன பேக் தெரியுமா?
விஜய் பிரச்சாரம்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் போது பிரச்சார வாகனத்தில் இருக்கும் பவுன்சர்களை பார்த்து இருப்போம், அவர் கையில் இருக்கு பேக்கையும் பார்த்து இருப்போம். தற்போது அது ஒரு சாதாரண பேக் இல்ல என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றும் அந்த பேக், உண்மையில் ஒரு புல்லட் ப்ரூப் ஷீல்ட் பேக் (bulletproof shield bag) ஆகும். இதை "ballistic protection bag" என்று கூட சொல்வார்கள், ஒரு எமர்ஜென்சியான சூழ்நிலையில், யாராவது கன்ஷாட் செய்யும்போது, தாக்குதல் நடத்தும் போது இந்த பேக்கை வைத்து அவர்களை பாதுகாக்கலாம்.

அச்சுறுத்தலை சமாளிக்க உதவும்: ஆனால், இது பார்ப்பதற்கு லைட் வெயிட்டாக தான் இருக்கும், ஆனால், முகம் மற்றும் மார்பு பகுதிகளை பாதுகாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த bulletproof shield bagல் உள்ளே இருக்கும் முக்கிய பகுதி ballistic panel (Kevlar / UHMWPE fiber) இது ஒரு வகை soft armor இருக்கும் எவ்வளவு வேகமாக புல்லட் வந்தாலும் இந்த பை தடுத்து நிறுத்தி விடும். இத்தகைய பாதுகாப்பு உபகரணங்கள் பொதுவாக முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களுக்கு பயன்படுத்தப்படுவது வழக்கம். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் எதிர்பாராத அச்சுறுத்தல்களை சமாளிக்க இது உதவும். வெளியே பார்த்தால் ஒரு சாதாரண பேக் போலவே இருக்கும் இந்த சாதனம், உடனடி பாதுகாப்பு கவசமாக மாறும் திறன் கொண்டது. விஜய் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் குவிந்து வருவதால் இது அவருக்கு தேவையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











