உலகமே உங்களுக்கு கீழ.. அரசியல்வாதிகளை ரவுண்டு கட்டி அடித்த கோபி, சுதாகர்.. விஜய்க்குதான் ஹைலைட்

சென்னை: தமிழ் யூடியூப் உலகில் கோபியும், சுதாகரும் ரொம்பவே ஃபேமஸ். அவர்கள் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் போடும் வீடியோக்கள் எல்லாம் பல மில்லியன் வியூஸ்களை அள்ளும். அதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும், அவர்களுடன் வீடியோவில் நடிக்கும் டிராவிட்டும் திரைத்துறையிலும் பிரகாசிக்க தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் காலமான இந்த காலத்தில் தலைவர்கள் செய்யும் பரப்புரையை வைத்து வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அது இணையத்தில் சென்சேஷனலாக மாறியிருக்கிறது.

யூடியூப் சேனல்களில் பிரபலமடைந்தவர்களில் கோபியும், சுதாகரும் தமிழ்நாட்டில் முக்கியமானவர்கள். எளிய பின்புலத்திலிருந்து கிளம்பி அந்து ஒரு சேனல் ரியாலிட்டி ஷோவில் ரிஜெக்ட் ஆகி அவமானங்களை சந்தித்தார்கள். அதனையடுத்து மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் ஸ்பூஃப் வீடியோக்களை போட ஆரம்பித்தார்கள். மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்டோரை கான்செப்ட்டாக வைத்து ரிலீஸ் செய்த வீடியோக்கள் பட்டித்தொட்டியெங்கும் வைரலாகின. அதனைத் தொடர்ந்து விதவிதமான கான்செப்ட்டுகளை பிடித்து வீடியோக்களை போட்டார்கள்.

Vijay Campaign Trolled Parithabangal Gopi Sudhakar s Pracharam Paavangal Video Goes Viral
Photo Credit:

பரிதாபங்கள் கோபி, சுதாகர்: அதே சேனலில் ஹாஃப் பாயில் என்ற தொடரிலும் நடித்தார்கள். நிலைமை இப்படி இருக்க சில காரணங்களால் அந்த சேனலிலிருந்து வெளியே வந்த அவர்கள்; தனியாக 'பரிதாபங்கள்' என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார்கள். இதிலும் பல கான்செப்ட்டுகளை பிடித்து வீடியோக்கள் போட்டு பெரிய சம்பவக்காரர்களாக மாறினார்கள். எங்கு திரும்பினாலும் அவர்களது வீடியோக்களும், அதிலிருந்த க்ளிப்பிங்குகளும்தான் இருந்தன.

Also Read
மனம் சந்தோஷமாக இல்லை.. திரிஷாவுக்கு என்ன ஆச்சு?.. ரொம்ப ஃபீல் செய்றாங்க.. ஏன் அப்படி சொல்றாங்க?
மனம் சந்தோஷமாக இல்லை.. திரிஷாவுக்கு என்ன ஆச்சு?.. ரொம்ப ஃபீல் செய்றாங்க.. ஏன் அப்படி சொல்றாங்க?

வடக்கு பரிதாபங்கள்: அவர்கள் வெளியிட்டதிலேயே உச்சம் கொண்டு சென்ற வீடியோக்களில் ஒன்று வடக்கு பரிதாபங்கள். வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்களை வைத்தும்; அதனால் தமிழர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் சேர்த்து அட்டகாசமாக வீடியோவை கொடுத்திருந்தார்கள். அது பயங்கர வைரலானது. அதேபோல் பல வீடியோக்களில் சுதாகர் கொடுக்கும் ரியாக்ஷன்களும் பட்டைய கிளப்பின, 'என்னாது இது', 'கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்' என பல மாடுலேஷன்கள் தனித்துவமாக ஜொலிக்கின்றன.

Vijay Campaign Trolled Parithabangal Gopi Sudhakar s Pracharam Paavangal Video Goes Viral
Photo Credit:

பிரசாரம் பாவங்கள்: இந்நிலையில் தற்போது பிரசாரம் பாவங்கள் என்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் காலம் உச்சக்கட்ட சூட்டில் இருக்கிறது. எனவே அனைத்து கட்சி தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் சென்று பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்கள். அவற்றில் பலரது செயல்பாடு பாராட்டும்படி இருக்கிறது. சிலரது செயல்பாடு விமர்சிக்கும்படி இருக்கிறது. அதிலும் விஜய்யின் பரப்புரை ஸ்டைல் மொத்தமாகவே வேறாக இருக்கிறது. ஒருநாள் ஒரு தொகுதியில் பேசிவிட்டார் என்றால் அடுத்த மூன்று நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிடுகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையின்போது டீ குடித்தது, சீமான் மழையில் நனைந்துகொண்டே பேசியது உள்ளிட்டவைகளை எல்லாம் கலாய்த்து அந்த வீடியோவில் காட்சிகள் இருக்கின்றன. முக்கியமாக விஜய்யை வைத்து செய்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர் பரப்புரை செய்த போது பலரும் பல பொருட்களை தூக்கி வீசினார்கள். அதை கிண்டலடிக்கும் விதமாக, உலக உருண்டையையே தூக்கி போட்டு தலைவா இந்த உலகமே உங்கள் காலுக்கு கீழே என்று ரசிகர்கள் சொல்லும்படி கலாய்த்திருக்கிறார்கள். அதேபோல் விஜய் பேசும் நேரத்தையும் சாடுவதற்கு அவர்கள் மறக்கவில்லை. வடக்கு பரிதாபங்கள், திருப்பதி லட்டு பரிதாபங்கள் போல் இதுவும் சென்சேஷனல் ஆகிவிட்டது. மேலும் விஜய் ரசிகர்களிடம் இது வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X