TVK Vijay: விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தில் துயரச் சம்பவம்.. காவல்துறை அதிகாரியின் கால் முறிவு

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஏப்ரல் இரண்டாம் தேதி ஆன இன்று திருச்சி கிழக்கில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியின் கால் மீது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா சென்ற கார் ஏறி இறங்கியதில் காவல்துறை அதிகாரியின் கால் முறிந்தது. வலியில் அலறி துடித்த காவல்துறை அதிகாரியை சக காவல்துறை அதிகாரிகளும் தவெகவைச் சேர்ந்த தொண்டர்களும் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தமிழ்நாட்டில் பிரச்சாரத்திற்கு எங்கு சென்றாலும் அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு விடுகிறார்கள். இதனால் ஏற்கனவே தவெக தரப்பில் அனுமதி பெறப்பட்டபோது நிர்ணயம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள், பாதுகாப்புக்கு இருந்தாலும் விஜய் ரசிகர்கள் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பது இல்லை.‌ அதுவும் குறிப்பாக கட்சி சார்பாக வரும் தொண்டர்கள் காவல்துறை சொல்வதை பின்பற்றினாலும் ரசிக மனப்பான்மையில் வரும் ரசிகர்கள் காவல்துறை சொல்வதை பின்பற்றுவதில்லை. சில நேரங்களில் அவரது கட்சித் தொண்டர்களும் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.

Vijay Campaign Turns Chaotic in Trichy Cop Injured After Car Runs Over Leg

நெருக்கடியான சூழல்: விஜய் செல்லும் சாலை மட்டுமல்லாமல் அதற்கு எதிர் சாலையில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் செல்வதை பார்க்க முடிகிறது. மேலும் கூட்ட நெரிசலில் பலரும் மயங்கி விழுவது, சிக்கித் தவிப்பது போன்ற காட்சிகளையும் பார்க்க முடிகிறது. விஜய்யை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் மரங்களில் ஏறுவது சாலை தடுப்புகள் மற்றும் தடுப்புச் சுவர்களில் ஏறுவது, விஜயின் வாகனத்தை பின் தொடர்வது என ஆபத்தான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். விஜய் இது தொடர்பாக அறிவுறுத்தியும் அவரது ரசிகர்கள் கேட்பதாக இல்லை. இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Vijay Campaign Turns Chaotic in Trichy Cop Injured After Car Runs Over Leg
Photo Credit:

காவல் அதிகாரியின் கால் முறிவு: திருச்சி கிழக்கில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியின் கால் மீது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா சென்ற கார் ஏறி இறங்கியதில் காவல்துறை அதிகாரியின் கால் முறிந்தது. வலியில் அலறி துடித்த காவல்துறை அதிகாரியை சக காவல்துறை அதிகாரிகளும் தவெகவைச் சேர்ந்த தொண்டர்களும் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X