விஜய் பிரதமர் ஆவார்.. அமெரிக்கா - ரஷ்யா பிரச்னையை தீர்ப்பார்.. ஜோதிடர் பண்டிட் போட்ட குண்டு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய் தனது பணிகளை தொடங்கி செய்துவருகிறார். முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருப்பதால் சில தடுமாற்றங்கள் அவரிடம் இருக்கின்றன. அதேசமயம் சொன்னால் திருத்திக்கொள்ளும் பண்பும் இருக்கிறது. தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசு உயர் பதவி வழங்கினார். சட்டப்பேரவையில் பிரேமலதா உள்ளிட்டோர் எதிர்க்குரல் கிளப்பியதும்; அந்த ஆணையை திரும்ப பெற்றார். இந்நிலையில் ரத்தன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026ன் முடிவுகள் இப்படி வரும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக் தமிழ்நாடு அரசியலில் கோலோச்சி அதிகார புள்ளியாக இருந்த இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு 108 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருமாறியது விஜய்யின் தவெக. அதனையடுத்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் கூடுதலாக அதிமுகவிலிருந்து 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்க; நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார்.

தடுமாற்றங்கள் உண்டுதான்: விஜய் இப்போது முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். இதற்கு முன்பு ஒரு எம்.எல்.ஏவாககூட அவர் இருந்ததில்லை. நேரடியாக முதலமைச்சராகியிருக்கிறார். எனவே அதற்குறிய தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முதலில் கடவுள் அறிய என பதவியேற்றுக்கொண்டார். அதற்கு கண்டனங்கள் எழ; சட்டப்பேரவையில் பதவியேற்கும்போது உளமார உறுதி கூறுகிறேன் என மாற்றிக்கொண்டார். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்துகிறார்.
மாற்றிக்கொண்ட விஜய்: முக்கியமாக தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசு உயர் பதவியை வழங்கினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதிலும் பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் போட்டு பிளந்துவிட்டார். ஒவ்வொரு அடியும் பலமாக விழ; இதை பற்றி மீண்டும் யோசிப்பேன் என கூறினார். சொன்னதோடு மட்டுமின்றி ரத்தன் பண்டிட்டை நியமித்த ஆணையையும் திரும்ப பெற்றார். தடுமாற்றங்கள் இருந்தாலும் சொன்னால் புரிந்துகொண்டு திருத்திக்கொள்வது கண்டிப்பாக ஆரோக்கியமான ஒன்றே.
ரத்தன் பண்டிட் பேட்டி: இந்நிலையில் ரத்தன் பண்டிட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "விஜய் இன்னும் 50 வருடங்களுக்கு முதலமைச்சராக இருப்பார். அடுத்தடுத்த கட்டங்களுக்கும் போவார். அவரை பொறுத்தவரை முதலமைச்சர் என்பது சாதாரண பதவி. அடுத்தது என்ன?. அது டெல்லி லெவல். அதற்கு அடுத்து என்ன உலக அளவிலான பதவி. அமெரிக்க அதிபருக்கும், ரஷ்ய அதிபருக்கும் ஏதோ ஒரு பிரச்னை என்றால் இவர் பேசலாமே.
ஏன் இருக்கக்கூடாது?: ஏன் அப்படி பேசக்கூடாது?.. விஜய் கண்டிப்பாக ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கமாட்டார். கண்டிப்பாக தவறு செய்யமாட்டார். தவறு செய்யாத தலைவர் இந்தியாவில் உருவாகும்போது அவர் உலக தலைவராக மாற முடியுமா? மாற முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார். இதை பார்த்த ரசிகர்களோ, சார் ரத்தன் சார் என்ன இதெல்லாம். டெல்லி மேலிடத்துக்கு இது போனால் என்ன நடக்குமோ?.. இருப்பதையும் இழுத்து தெருவில் விட்டுடாதீங்க என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
