Vijay Car: விஜய், SRK, ராம்சரண்... இப்போ இவங்களுக்கு தான் போட்டியே... ரோல்ஸ் ராய்ஸ் விலை தெரியுமா?

சென்னை: திரையுலகில் ஹிட் படம் கொடுக்கும் நடிகர்களை விட யார் காஸ்ட்லியான கார் வைத்திருக்கிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், விஜய், ஷாருக்கான், ராம் சரண் மூவரும் சூப்பர் ஹிட் படங்கள் கொடுப்பதை போலவே, சூப்பர் கார் ஒன்றையும் வாங்கியுள்ளனர்.

தமிழில் விஜய், தெலுங்கில் ராம் சரண், இந்தியில் ஷாருக்கான் என இவர்கள் மூவருமே டாப் ஹீரோக்கள் தான்.

இந்த மூன்று பேரும் கேரியரில் டாப்பில் இருப்பதை போன்று, யாரிடமும் இல்லாத காஸ்ட்லியான கார் வாங்கி கெத்து காட்டியுள்ளனர்.

 Vijay Car: Vijay, Shah Rukh Khan, and Ram Charan own Rolls Royce cars worth 10 crores

காஸ்ட்லி ரோல்ஸ் ராய்ஸ் செலிபிரிட்டிஸ்: தமிழில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படம் இந்தாண்டு ஆயுத பூஜைக்கு வெளியாகிறது. இந்நிலையில், நடிப்பில் அதிக ஆர்வம் காட்டும் விஜய், காஸ்ட்லியான கார்களை வாங்கி குவிப்பதிலும் விருப்பம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BMW, மினி கூப்பர், ரேஞ்ச் ரோவர், ஆடி என சொகுசு கார்களை வைத்திருக்கும் விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் காரும் உள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம், இயக்குநர் நெல்சன், பூஜா ஹெக்டே, சதீஷ், அபர்ணா ஆகியோரை தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரவுண்டு அடித்து காட்டினார் விஜய். முக்கியமாக இந்த காரின் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும்.

 Vijay Car: Vijay, Shah Rukh Khan, and Ram Charan own Rolls Royce cars worth 10 crores

விஜய் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 10 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. கோலிவுட்டில் இயக்குநர் ஷங்கர், காமெடி நடிகர் சந்தானம் ஆகியோரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருந்தாலும், அவை விஜய்யின் காரை விட விலை குறைவு எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே விஜய்யிடம் தான் காஸ்ட்லியான ரோல்ஸ் ராய்ஸ் கார் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யிடம் இருக்கும் இதே ரக ரோல்ஸ் ராய்ஸ் கார், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானிடமும், டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரணிடமும் உள்ளதாம். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார் ராம் சரண். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ராம் சரணுக்கு, அவரது தந்தை சிரஞ்சீவி 10 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்துள்ளாராம்.

 Vijay Car: Vijay, Shah Rukh Khan, and Ram Charan own Rolls Royce cars worth 10 crores

ராம் சரணிடம் ஏற்கனவே 3.5 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர், 4 கோடி மதிப்பில் ஆஸ்டன் மார்ட்டின், 2.5 கோடி மதிப்புடைய BMW M7, Mercedez Benz G62 AMG போன்ற கார்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தற்போது புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் ஹைதராபாத் நகரை வலம் வருகிறாராம் ராம் சரண். தெலுங்கிலும் இன்னும் சில திரை பிரபலங்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தாலும், ராம் சரணின் கார் தான் காஸ்ட்லி என சொல்லப்படுகிறது.

அதேபோல் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளாராம். பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு உரிமையாளரான ஷாருக்கான், கார்களையும் வகை வகையாக வாங்கி வீட்டில் நிறுத்தி வைத்துள்ளாராம். BMW, Audi, Benz, Range Rover என பல ஆடம்பர கார்கள் இருந்தும், தற்போது ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் வலம் வருகிறாராம். ஆகமொத்தம் 10 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருக்கும் செலிபிரிட்டிகளில் விஜய், ஷாருக்கான், ராம் சரண் தான் டாப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X