அஜித் பட வெற்றியை கொண்டாடிய விஜய்… வெளியான புது தகவல் !

சென்னை : அஜித் படம் வெற்றியை விஜய் விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்.

தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்.

விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

வலிமை

வலிமை

அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் பைக்கை வைத்துக்கொண்டு நகை திருட்டு,கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பது அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹுமா குரோஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் போன்றவர்கள் நடித்திருந்தனர்.

திரண்ட ரசிகர்கள்

திரண்ட ரசிகர்கள்

வலிமை படம் வினோத்தின் சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் தரத்திற்கு இல்லை என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட உண்மை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வரும் அஜித் திரைப்படம் என்பதாலும், படத்தில் இடம்பெற்றிருந்த பைக் சண்டைக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்ததாலும் வலிமை படத்தை பார்க்க பெருமளவில் ரசிகர்கள் திரையரங்கில் திரண்டு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மங்காத்தா

மங்காத்தா

இந்நிலையில்,வெங்கட்பிரபு சமீபத்தில் அளித்துள்ள போட்டியில், மங்காத்தா படத்தின் வெற்றிக்காக, தன்னை வீட்டிற்கு அழைத்து நடிகர் விஜய் விருந்து வைத்ததாக கூறியுள்ளார். அஜித்தின் 50வது படமான மங்காத்தா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகும். அந்த படத்தில் பிரேம்ஜி, த்ரிஷா, அர்ஜுன் போன்றவர்கள் நடித்திருந்தனர்.

துளியும் ஈகோ இல்லை

துளியும் ஈகோ இல்லை

அஜித்துடைய நடிப்பில் இன்று வரை கொண்டாடக்கூடியு திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மங்காத்தா வெற்றி பெற்ற படமாகும். விஜய் ரசிகன், அஜித் ரசிகன் என ரசிகர்கள் தான் ஒருரை ஒருவர் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் எந்தவித ஈகோவும் இல்லாமல் ஒருவிதமான அன்பு உள்ளது. சினிமாதுறையில் இது, ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X