வாவ் விஜய் செம க்யூட்.. குழந்தைகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. மனுஷன் செம அழகு
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய்க்கு ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு அவரை திரையில் பார்க்க முடியாது. அரசியல் களத்தில் பார்க்கலாம். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று தவெக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கிய கையோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று பார்த்தால்; அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குவோம் என்று அறிவித்துவிட்டார். இதுவரை அவர் ஏறிக்கொண்டிருக்கும் மேடைகளில் திமுகவைதான் டார்கெட் செய்து அதிகம் அடித்துவருகிறார்.
திமுகவின் பதிலடி: விஜய்யின் இந்த அட்டாக்கை திமுகவினரும் தங்களால் முடிந்த அளவுக்கு சமாளித்துவருகிறார்கள். கரூரில் நடந்த துயர சம்பவம் திமுகவினரின் விமர்சனத்துக்கு கைகொடுக்க; விஜய் சில நாட்கள் பனையூர் அலுவலகம் மற்றும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். பிறகு பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து ஆறுதல் சொல்லி; அவர்களிடம் மன்னிப்பு கேட்டு உதவிகள் செய்ய ஆரம்பித்த பிறகு மீண்டும் பொதுவெளியில் வந்து மக்களை சந்தித்து பேசிவருகிறார்.

சீனியர்களின் வருகை: இது ஒருபக்கம் இருக்க அதிமுகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்ததை அடுத்து செங்கோட்டையனும், திமுகவில் முக்கியத்துவம் குறைந்ததால் நாஞ்சில் சம்பத்தும் தவெகவுக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் மட்டுமின்றி யூடியூபர்களும், சோஷியல் மீடியாவில் பிரபலமான சிலரும் நேற்று தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டார்கள். தொடர்ச்சியாக கட்சிக்கு பலர் வருவதை பார்த்து விஜய் ஹேப்பியாக இருந்தாலும்; அவர்களால் தேர்தலில் பயன் இருக்குமா என்பது போகப்போக தெரிந்துவிடும்.
தவெகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சூழல் இப்படி இருக்க இன்று தவெக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட விஜய், சிறு குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டியும், அவர்களுக்கு ஊட்டிவிட்டும் மகிழ்ந்தார். அந்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, சினிமாவாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் இளம் தலைமுறையினரை பிடிப்பதில் விஜய்க்கு நிகர் விஜய்தான். இதில் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
விஜய்யின் பேச்சு: இந்த விழாவில் பேசிய விஜய், "சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழகம் நூறு விழுக்காடு உறுதியாக இருக்கும். அதில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளமாட்டோம். நமது கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என பெயர் வைத்ததே இந்த உறுதியால்தான். கண்டிப்பாக ஒளி பிறக்கும். அந்த ஒளிதான் நம்மை வழிநடத்தும்" என பேசினார். அவரது இந்தப் பேச்சும் தவெக தொண்டர்களிடம் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











