நடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று.. விஜய் திரைப்பயணம் ஒரு பார்வை! #happybirthdayTHALAPATHY

Recommended Video

Bigil Movie Poster: தளபதி 63 படத்தின் பிரஸ்ட் லுக்- வீடியோ

சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் தனது 10வயதில் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1988ஆம் ஆண்டு அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய இது எங்கள் நீதி படம் வரை குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.

பின்னர் தனது 18 வயதில் எஸ்ஏ சந்திர சேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து தனது தந்தை இயக்கத்திலேயே நடித்து வந்த விஜய்.

திருப்பு முனை

திருப்பு முனை

விஜய்க்கு இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இதுவரை நடிகர் விஜய் 62 படங்களில் நடித்துள்ளார். தனது 63வது படமான பிகில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

நடனம், பாடல்

நடனம், பாடல்

நடிகர் விஜய் இதுவரை 50க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளார். தமிழில் முன்னணி கதாநாயகரான விஜய், சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறப்பாக நடனம் ஆடும் திறமையும் பாடும் திறமையும் கொண்டவர்.

கேரண்டியுடன் செல்லலாம்

கேரண்டியுடன் செல்லலாம்

தொடக்க காலத்தில் தனது படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது விஜய் பாடிவிடுவார். விஜய் படத்திற்கு சென்றால் அவரது குரலில் ஒரு பாடலையாவது கேட்டுவிடலாம் என்ற கேரண்டியுடன் செல்லலாம்.

பல நாடுகளிலும் ரசிகர்கள்

பல நாடுகளிலும் ரசிகர்கள்

விஜய்க்கு இந்தியா மட்டுமின்றி, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக குழந்தை ரசிகர்கள் மற்ற ஹீரோக்களை காட்டியும் விஜய்க்கு அதிகம் என்றும் உறுதியாக கூறலாம்.

ரசிகர்கள் வாழ்த்து மழை

ரசிகர்கள் வாழ்த்து மழை

இந்நிலையில் விஜய் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்

ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்

விஜய் பிறந்தநாளை கடந்த 3 நாட்களாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் #happybirthdayTHALAPATHY , #HBDEminentVijay ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட்டாக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X