47வது பிறந்தநாள் காணும் தளபதி விஜய் .. ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து
சென்னை: இன்று 47வது பிறந்தநாள் காணும் தளபதி விஜயை ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
தளபதி பிறந்தநாளை முன்னிட்டு வெளியான Beast படத்தின் போஸ்டர்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் காமன் DP உட்பட #HBDBelovedVijay எனும் ஹாஸ்டேகை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாழ்த்து தெரிவித்தார்
நகைச்சுவை நாயகனான யோகி பாபு ட்விட்டரில் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்கார், பிகில் படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். Beast படத்திலும் பணியாற்றவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ட்விட்டரில் வாழ்த்து
இயக்குனரும், நடிகரும், நடன கலைஞரும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் தளபதி விஜய்யுடனான புகைப்படத்தை பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தீவிர ரசிகை
தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான வரலக்ஷ்மி சரத்குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.

வாழ்த்து தெரிவித்தார்
தமிழ் சினிமாவில் முன்னனி தயாரிப்பாளர்களில் ஒருவரான S. P. சௌத்ரி தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான டகால்டி படத்தை தயாரித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications